ETV Bharat / state

ஜோலார்பேட்டை திமுக எம்எல்ஏ மகள் சென்ற கார் விபத்து.. 5 பேர் பலத்த காயம்! - Car Accident In Tirupathur - CAR ACCIDENT IN TIRUPATHUR

Car Accident In Tirupathur: நாட்றம்பள்ளி அருகே திமுக எம்எல்ஏ மகள், மருமகன் சென்ற கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் விபத்து புகைப்படம்
கார் விபத்து புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 10:40 PM IST

திருப்பத்தூர்: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி அருணாதேவி. இவர் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜின் மகள் ஆவார். மோகன்ராஜ் - அருணாதேவி ஆகிய இருவரும் மருத்துவர்கள். இவர்கள் தருமபுரியில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அருணா தேவியின் சகோதரரும், திருப்பத்தூர் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளருமான பிரபாகரனின் மனைவிக்கு, நேற்று வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையைப் பார்ப்பதற்காக அருணாதேவி, அவரது கணவர் மோகன்ராஜ், இவர்களின் 10 வயது மகன் தர்ஷனேஷ், மோகன் ராஜின் தந்தை கண்ணன், தாயார் கிருஷ்ணவேணி ஆகிய 5 பேரும் காரில் தருமபுரியிலிருந்து வேலூர் நோக்கி வந்துள்ளனர்.

அப்பொழுது, கார் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் சுங்கச்சாவடி, பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுக்குட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, திடீரென காரின் முன்பக்கம் உள்ள வலது பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், காயமடைந்த 5 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேர்தல் 2024; விழுப்புரத்தில் சிவி சண்முகத்தின் வியூகம் பலிக்குமா? வெற்றியை தக்க வைப்பாரா ரவிக்குமார்? - Lok Sabha Election 2024‘

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.