விழுப்புரம்: விழுப்புரம் அருகே விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சித்தானாங்கூர் கிராமம். இந்த கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில், கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, காட்டுப்பன்றி ஊருக்குள் புகுந்து இன்று ஒருவரையும் கடித்துள்ளது. மேலும், பக்கத்தில் உள்ள மற்றொரு கிராமமான மாமண்டூர் கிராமத்திலும் சிலரை கடித்துள்ளதாகவும் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலரையும் காட்டுப்பன்றி கடித்துள்ளது. இதில் காயமடைந்த வனத்துறை அலுவலர், 2 பெண்கள் உட்பட மொத்தம் 9 பேரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த காட்டுப்பன்றியை விரைந்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: “சீரியஸாக இருந்த பிரதமர் நகைச்சுவை அடிக்க ஆரம்பித்துவிட்டார்”.. எம்பி திருநாவுக்கரசர்! - Congress Mp Thirunavukkarasar