ETV Bharat / state

'பிரியமான தோழி' சீரியல் நடிகை தீபா சென்னை கோர்ட்டில் மனு.. காரணம் என்ன? - Serial actress Deepa

Serial Actress Deepa: காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

Chennai Family Welfare Court
சீரியல் நடிகை தீபா சென்னை கோர்ட்டில் மனு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 8:54 PM IST

சென்னை: காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். சின்னத்திரை நடிகை தீபா பல தனியார் சேனல்களில் வெளியாகும் தொடர் நாடகங்களில் நடித்து வருகிறார்.

தீபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், தன்னுடைய மகனுடன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் கணேஷ் பாபு என்பவருடன் தீபாவுக்கு காதல் ஏற்படவே இருவரும் கடந்த ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டு தீபாவின் வீட்டில் வசித்து வந்தனர்.

இதனையடுத்து சமீப காலமாக இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டதால், தீபாவைப் பிரிந்து கணேஷ் பாபு வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தன்னுடைய கணவர் கணேஷ் பாபுவின் சகோதரர் ரமணகிரிவாசன் என்பவர் தனக்குத் தொடர்ந்து மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாலும், கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாலும் தனக்கும் தன்னுடைய கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ்வதையே தான் விரும்புவதால் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டுமென மனுவில் கூறி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: சங்கரன்கோவில் பகுதியில் வேன் டிரைவர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! டிரைவரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.