ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36வது முறையாக நீட்டிப்பு! - EX Minister Senthil Balaji Case - EX MINISTER SENTHIL BALAJI CASE

EX Minister Senthil Balaji Case: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 3:04 PM IST

சென்னை: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில், வங்கி ஆவணங்களை வழங்கி, அதன் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்று, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வங்கி தொடர்பான அசல் ஆவணங்களை செந்தில் பாலாஜியிடம் வழங்கியது. இதையடுத்து, இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்து, இன்று (ஏப்ரல் 30) உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றம் அசல் செலான்களை வழங்க உத்தரவிட்ட நிலையில், வங்கி தாக்கல் செய்த செலான்களில் இரண்டு செலான்கள் நகலெடுக்கப்பட்டவை என்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் செலான்களை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதன் மூலம் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 36வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு; நீலகிரி அதிமுக செயலாளருக்கு முன் ஜாமீன்! - Nilgiris Lok Sabha Polls

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.