காஞ்சிபுரம் : திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கடந்த செப் 17ம் தேதி முப்பெரும் விழாவோடு சேர்த்து திமுக பவள விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "கருவறை முதல் கல்லறை வரை திட்டம் தீட்டியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி ஒரு கண்ணாகவும், திட்டங்கள் ஒரு கண்ணாகவும் செயல்படுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகள் எந்த துறையும் செயல்படாமல், கடைசி நிலையில் இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் மீண்டும் முதன்மையாகக் கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். தமிழ்நாட்டை தொட்டால் சாக் அடிக்கும். தமிழக மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறவர் என்ற அச்சம் மோடிக்கு உள்ளது. திமுக நூற்றாண்டு விழாவில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்ய வேண்டும். காங்கிரஸ் - பெரியார்- அண்ணா - காமராஜர் - கருணாநிதி - இந்திரா காந்தி என எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், திமுகவின் பன்பு இந்தியாவிற்கே முன்னோடியாக இருந்துள்ளது.
இன்று (28.09.2024) காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.கழக பவளவிழாவில் கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டேன்.#DMKPavalavizha pic.twitter.com/ltuw3kes05
— Selvaperunthagai K (@SPK_TNCC) September 28, 2024
அவர்கள் வழியில், என்னுடைய மூத்த அண்ணன் மு.க.ஸ்டாலின் என ராகுல் காந்தி கூறினார். மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும். இந்தியா கூட்டணி தலைவர்கள் உடனிருப்பார்கள்" என பேசினார்.
பின்னர் பேசிய கொங்கு ஈஸ்வரன், "தமிழகத்தில் இன்று முதலமைச்சருக்கு போட்டி இல்லை. ஆனால் துணை முதலமைச்சருக்கு தான் போட்டி அதிகம். யார் தமிழகத்தின் முதலமைச்சர் என்றால் திராவிட முன்னேற்றம் கழகம் தான். அதே போல தான் யார் துணை முதலமைச்சர் என்றால் அதுவும் திரவிட முன்னேற்ற கழகம் தான். அதற்கு TNPSC தேர்வு எழுதி தேர்வு செய்ய முடியாது. தொண்டர்கள் யாரை தேர்வு செய்வார்களோ அவர் தான் துணை முதலமைச்சர்" என பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்