திருநெல்வேலி: சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காமராஜர் நினைவிடம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
காமராஜர் நினைவிடத்தை இடுகாடு போன்று வைத்திருப்பது காங்கிரஸ் தோழர்களுக்கு வேதனையாக இருக்கிறது. குறைந்தபட்சம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடைய நினைவிடம் போன்று, காமராஜர் நினைவிடத்தைப் பராமரிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஒரு அளவுகோல் காமராஜர் நிபோனைவிடத்திற்கு ஒரு அளவுகோல் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சரிடம் புகார் கொடுக்க உள்ளேன். அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், முதலமைச்சரிடம் புகார் அளிக்க உள்ளேன்” என்றார்.
தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை மட்டும் ஏன் கூறுகிறீர்கள், கருணாநிதி நினைவிடமும் அங்கே தானே உள்ளது என்ற கேள்விக்கு, “காமராஜரின் வாழ்க்கை, அரசியல், ஆட்சி இதையெல்லாம் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பதற்காகத் தான் கூறினே தவிர, யாரையும் சங்கடப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கவில்லை.
திருநெல்வேலி காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு குறித்தான கேள்விக்கு, போலீசாரின் விசாரணை துரிதமாக சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. போலீசார் கண்ணியமாக, நியாயமாகச் செயல்படுவார்கள்" என நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இளையராஜா அப்படி கூறவில்லை..” வைரமுத்து விவகாரத்தில் சீமான் கூறியது என்ன? - SEEMAN About Ilayaraja Issue