ETV Bharat / state

"கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டெடுத்திருக்கலாமே" - செல்லூர் ராஜு கேள்வி! - Sellur Raju said Kachchathivu issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 8:40 PM IST

Kachchatheevu Issue: தேர்தல் ஆதாயத்திற்காக மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல பாஜக நடிக்கிறது எனவும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டு எடுத்திருக்கலாமே என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி உள்ளார்.

Kachchatheevu Issue
Kachchatheevu Issue
Sellur Raju Press Meet

மதுரை: மதுரை கே.கே.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "கச்சத்தீவை பற்றி பிரதமர் பேசுவது தேர்தல் ஸ்டண்ட் தான். அண்ணாமலை புதிதாக ஏதோ கண்டு பிடித்தவர் போல பேசுகிறார்.

கச்சத்தீவு விவகாரம்: கச்சத்தீவு விவகாரம் குறித்து அண்ணாமலைக்கு எதுவும் தெரியவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக பொய் சொல்கிறது என்றால், பாஜக பயங்கரமான பொய் சொல்கிறது. மோடி கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்டு எடுத்திருக்கலாமே. தேர்தலுக்காக மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடிக்கிறார்கள்.

எங்கே தங்களுக்கு அதிகமான தொகை கிடைக்கும், ராஜ்யசபா சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குடும்பம் போல, ராமதாஸ் குடும்பமும் குடும்ப அரசியல் செய்கிறது.

பாமக- பாஜக கூட்டணி: பாஜக கூட்டணியை ராமதாஸ் ஏற்கவில்லை, அன்புமணியின் அழுத்தத்தில் தான் ஏற்றுக் கொண்டுள்ளார். அதிமுகவுக்கு பாமக உயிர் கொடுத்தது என அன்புமணி சொல்வதெல்லாம் பெரிய ஜோக் தான்.

திமுக வாரிசு அரசியல்: திமுக கொண்டு வரும் திட்டங்களுக்குக் கருணாநிதியின் பெயர் வைப்பதற்கு காரணம் என்ன? ஏன்? பெரியார் அண்ணா ஆகியோரின் பெயர்களை வைப்பதில்லை. அதிமுக திராவிட சித்தாந்தத்தில் சரியாகப் பயணிக்கிறது.

திமுக பெயரளவில் தான் அண்ணாவின் பெயரைப் பயன்படுத்துகிறது. திமுகவினர் கருணாநிதியை மறந்து விட்டார்கள். தமிழகத்தில் மன்னர் பரம்பரையை ஒழித்தாலும் திமுகவின் வாரிசு அரசியலை ஒழிக்க முடியவில்லை.
அதிமுகவில் ஜெயலலிதாவைத் திட்டாதவர் யார்? நாவலர், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் ஜெ.வை திட்டினார்கள். ஜெயலலிதாவும் உதிர்ந்த ரோமம் என திட்டினார். யாரும் கூட்டணியில் வரவில்லை என்றால் கவலைப்படமாட்டார்.

தமிழகத்தில் இரண்டே கட்சி தான்: வைகோவை கடந்த 2011 ஆம் ஆண்டு அழைத்தார், அப்போது வந்திருந்தால் கட்சி நிலைத்திருக்கும். தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான். ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. இந்த தேர்தலிலும் அதைத்தான் மக்கள் பார்ப்பார்கள்" என்றார்.

இதையும் படிங்க: பிரச்சாரத்திற்கு புது ரக சேலை; வேட்பாளர் செருப்பை கையில் தூக்கிய உதவியாளர்.. சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்! - Nainar Nagendran Campaign Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.