ETV Bharat / state

திருப்பத்தூரில் ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்.. 7 பேர் கைது.. தனிப்படையினர் அதிரடி! - WHALE VOMIT SEIZURE

திருப்பத்தூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 2 கிலோ திமிங்கல மீன் எச்சத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கைதான ஏழு பேருடன் போலீசார்
கைதான ஏழு பேருடன் போலீசார் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 1:57 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில், திமிங்கலத்தின் எச்சம் வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குள்ளப்பனார் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (43) என்பவர் வீட்டில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 2 கிலோ அளவிலான திமிங்கலத்தின் எச்சம் வைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் திருப்பத்தூர் போஸ்கோ நகரைச் சேர்ந்த சிவகார்த்திகேயன் (28), வினித் (27), புங்கம்பட்டு நாடு மலை கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் (25), திருப்பத்தூர் சவுடே குப்பம் பழைய காலனியைச் சேர்ந்த பாண்டியன் (22), அன்னாண்டப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சிக்கந்தர் (22), சண்முகனார் தெருவைச் சேர்ந்த சத்யநாராயணன் (22) ஆகியோரை பிடித்தனர்.

இதையும் படிங்க: 'கடவுள் இருக்கான் குமாரு'.. உதயநிதி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. எச்.ராஜா விமர்சனம்!

இதையடுத்து, அவர்கள் 7 பேரை திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், முத்துக்குமார் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சம் 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கடத்தி வந்து வைத்திருப்பது தெரிய வந்தது.

இதன் காரணமாக, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், விலை உயர்ந்த திமிங்கல எச்சம் திருப்பத்தூருக்கு எப்படி வந்தது? இதன் பின்புலத்தில் யார் ஈடுபட்டு உள்ளார்கள் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.