ETV Bharat / state

தவெக கொள்கை அழுகிய கூமுட்டை; கருவாட்டு சாம்பார்.. 'இட்ஸ் வெரி ராங் ப்ரோ' என விஜயை விளாசிய சீமான்!

திராவிடமும், தமிழ்தேசியமும் ஒன்றா? முதலில் அடிப்படையே தவறு. இது கொள்கை இல்லை கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை என தவெக தலைவர் விஜயை சீமான் விமர்சனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமான், விஜய்
சீமான், விஜய் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 1:20 PM IST

சென்னை: தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நேற்று (நவ.1) சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யை சரமாரியாகத் தாக்கி விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, "த.வெ.க கூட்டம் நடத்துவதற்கு நிறைய நெருக்கடி என்றார்கள். ஆனால், கூட்டம் நடக்கும் இடத்தைப் பார்த்தபின் தான் தெரிகிறது ரெம்ப நெருக்கடி என்று. தம்பி நான் குட்டிக் கதை சொல்லுபவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமே தான் பெரியார், அம்பேத்கர் எல்லாரைப் பற்றியும் படிக்கனும். ஆனா, நாங்க படிச்சி, Phd-ல தீசஸ் சம்பிட் பன்னியிருக்கோம்.

மேடையில் விஜய்யை விமர்சனம் செய்த சீமானின் வீடியோ (Credits- ETV Bharat Tamil Nadu)

சங்க இலக்கியத்தை இனிமேதான் எங்க இருக்கிறது இலக்கியம் எனத் தேடவேண்டும். ஆனால், சங்க இலக்கியத்தில் வருகிற பாண்டியன், நெடுஞ்செழியனின் பேரனும், பேத்திகளுமடா நாங்கள்!. அது கதையல்ல எனது இன வரலாறு. அன்பு என்றால் அன்பு வெரும் அன்பு அல்ல பேரன்பு. வம்பு என்றால் வம்பு, சாதாரண வம்பு இல்லை உடன் பிறந்தார்களே! கொடிய வம்பு. நீங்கள் வெட்ட அரிவாளைத் தூக்குகிறபோது விழுந்து கும்பிடுகிற ஈனப்பிறப்புகள் அல்ல நாங்கள் என ஆவேசமாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: இன்னும் தகவல் வரல; கேட்டு சொல்றேன் - செந்தில் பாலாஜி பதில்!

தொடர்ந்து பேசிய அவர், "திராவிடம் என்றால் என்ன என்று அவர்களுக்கும் தெரியவில்லை, தமிழ் தேசியம் என்ன என்பது இவர்களுக்கும் தெரியவில்லை. ஆத்துல கால வை இல்லன்னா சேத்துல கால வை. இரண்டிலும் கால் வைத்தால் என்ன அர்த்தம். திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று, எங்கள் கண்ணு என்று கூறியதைக் கேட்டு பயந்துவிட்டேன்.

தமிழ் தேசிய அரசியல் பேராசன் மணியரன், ஒன்னு சாம்பார் அல்லது கருவாட்டுக் குழம்பு என்று சொல்லு, கருவாட்டுச் சாம்பார் என்று சொல்லாதே. அதுவேறு இது வேறு. தற்போது காட்டுப் பூனையும், நாட்டுக் கோழியும் ஒன்னா என்கிறார். ஏனென்றால், அண்மையில் வந்த படத்தில் வில்லனும், கதாநாயகனும் ஒரே ஆள் நடித்ததால், திராவிடமும், தமிழ் தேசியமும் வேணும் என்கிறார். 75 வருடம் நிறைவு செய்த திமுகவுக்கே திராவிடம் என்றால் என்னவென தெரியவில்லை.

அடிப்படையே தவறு.. இது கொள்கை இல்லை கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை. ஒன்னு சாலையில் அந்த ஓரத்தில் நில்லு. இல்லைனா சாலையில் இந்த ஓரத்தில் நில்லு. நடுவில் நின்றால் லாரி அடிச்சி செத்துப்போவ பார்த்துக்கோ. எதாவது ஒரு பக்கம் நில்லு. What Bro.. Its very Wrong Bro. நான் கருவிலேயே என் எதிரியை தீர்மானித்துவிட்டு வந்தவன்.

சரக்கு இருக்கு கருத்து இருக்கு அதனால் சத்தமாக பேசுகிறோம். எங்கள் முன்னவர்கள் ஒன்றை தான் கற்று கொடுத்துள்ளார்கள். உண்மையை பேசு. அதை உரக்க பேசு. உறுதியாக பேசு. இறுதி வரை பேசு என்று. இதுதான் எங்கள் கோட்பாடு.

"திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும்

மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்

பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்

சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு

ஞாபகம் செய் முழங்கு சங்கே!" என்று பாடியவனின் பேரனடா நான்.

இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி. நெஞ்சு டயலாக் இது. நெஞ்சு டயலாக். இதயத்தில் நெருப்பு எரிகிறபோது சில பொறிகள் வாய்வழியாக வந்து விழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என் இனம் தூக்கி சுமந்து வருகிற வலியின் மொழிதான் எங்களின் மொழி. விடுதலை பெற்றவர் பேசுவதற்கும், அடிமை பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. வேறுபாடு உண்டு ப்ரோ.. எங்கள் கோட்பாடு ஒன்று தான். எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில், அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது.

எனது தங்கை இசை பிரியா கொல்லப்பட்ட போது துடித்தது தமிழ் தேசியம். தூர நின்று சிரித்தது திராவிடம். இரண்டும் ஒன்றா?. உடலில் நெருப்பு கொட்டி வெந்தது வீர தமிழன் முத்துகுமார். அது தமிழ் தேசிய பெரும் நெருப்பு. கடற்கரையில் தலைக்கு ஒரு ஏசி. காலுக்கு ஒரு ஏசி. தலைமாட்டில் மனைவி, கால்மாட்டில் துணைவி என்று போலி உண்ணாவிரதம் நடத்துவது தான் திராவிடம். இரண்டும் ஒன்றா? என ஆக்ரோசஷமாக பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து பலத்த கரஷங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.