ETV Bharat / state

குடியரசு தின விழா: பாதுகாப்பு வளையத்துக்குள் சென்னை!

Republic Day 2024: குடியரசு தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டு, விழா நடைபெறும் மெரினா கடற்கரை சாலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சென்னை நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 1:31 PM IST

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜன.26) 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் பங்கேற்பதால், இன்றும், நாளையும் (ஜனவரி 25, 26) ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ-லைட் ஏர்கிராஃப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேண்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவை பறக்கவிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்து உள்ளார். சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது என பெருநகர சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.

சோதனைகள்: மேலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காவல் அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார்கள், மோப்பநாய் பிரிவு, மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை பிரிவினருடன் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாகன தனிக்கைகள்: சென்னை பெருநகர் முழுவதும் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டு, நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5 அடுக்கு பாதுகாப்பு: ஆளுநர் மாளிகை மற்றும் முதலமைச்சர் இல்லத்தில் இருந்து மெரினா செல்லும் வழித்தடங்கள், விழா நடைபெறும் பகுதி ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெரினா காமராஜர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி வரை 5 அடுக்கு பாதுகாப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.