ETV Bharat / state

பிஇ, பிடெக் பொறியியல் படிப்பு கலந்தாய்வு; முதல் சுற்றில் 20,142 பேருக்கு இடஒதுக்கீடு! - Engineering Counseling - ENGINEERING COUNSELING

Engineering Counseling: பிஇ, பிடெக் பொறியியல் படிப்புகளில் முதல் சுற்று கலந்தாய்வில் 30 ஆயிரத்து 699 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 20 ஆயிரத்து 142 மாணவர்களுக்கு மட்டும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 10:55 PM IST

சென்னை: 2024-25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் 433 கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன.

பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 29 ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் 110 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமும், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமும் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். முதல்கட்ட கலந்தாய்வில் 30 ஆயிரத்து 699 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டன.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் கட் ஆப் 200 முதல் 179 வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், கட் ஆப் மதிப்பெண் 179 வரையில் பெற்ற 1,343 மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொழிற்கல்விப் பிரிவில் கட் ஆப் மதிப்பெண் 85 வரையில் பெற்ற 2,267 மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் 435 மாணவர்களும் முதல்கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர்.

முதல் கட்ட கலந்தாய்விற்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மாணவர்கள் தங்கள் விருப்பும் கல்லூரிகளையும், பாடப்பிரிவையும் பதிவு செய்தனர். மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு கடந்த ஆக 1ஆம் தேதி வழங்கப்பட்டது.

பின்னர் 2ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் இடத்தை உறுதி செய்தனர். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை 10 மணிக்குள் உறுதி செய்து ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மேலே பதிவு செய்த கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர்வதற்கு விரும்புகிறேன் என்பதை தெரிவிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளை உறுதி செய்து அதில் சேரலாம். ஆகஸ்ட் 10 ஆம் தேதி பதிவு செய்ததில் மேலே உள்ள கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர விரும்புகிறேன் என கூறியவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு 20,142 மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வு பொறியியல் படிப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

பொதுப் பிரிவு கலந்தாய்விற்கு 26,678 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 22,699 மாணவர்கள் விரும்பி கல்லூரிகளை பதிவு செய்தனர். 21,408 மாணவர்களுக்கு தற்காலிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 10,890 மாணவர்களுக்கு கல்லூரியில் பாடப்பிரிவு மற்றும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6,870 மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையத்திற்கு சென்று தங்களின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 835 மாணவர்களுக்கு கல்லூரியில் அவர்கள் கேட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 323 மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தற்காலிக ஒதுக்கீட்டை உதவி மையம் சென்று உறுதி செய்து கொள்ள வேண்டும். தொழிற்கல்வி பாடப்பிரிவில் 899 மாணவர்களுக்கு அவர்கள் கேட்ட கல்லூரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 165 மாணவர்கள் உதவி மையத்திற்கு சென்று தங்களின் ஒதுக்கீட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தொழிற்கல்வி பாடப்பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 133 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 27 மாணவர்கள் உதவி மையத்திற்கு சென்று ஒதுக்கீட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முதல் சுற்று கலந்தாய்வில் மாணவர்களுக்கு 12,757 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் 7,385 மாணவர்கள் மாணவர் சேர்க்கை உதவி மையங்களுக்கு சென்று ஒதுக்கீட்டை 7 ஆம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் உதவி மையங்களில் இடங்களை உறுதி செய்யா விட்டால் அந்த இடங்கள் ரத்து செய்யப்படும்" என கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு; முதல் சுற்றில் 24,177 மாணவர்களுக்கு தற்காலிக இடஒதுக்கீடு! அடுத்து செய்ய வேண்டியது என்ன? - Engineering Counseling

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.