ETV Bharat / state

வெற்றி துரைசாமி; 5வது நாளாக தொடரும் தேடுதல் பணியில் இணைந்த கப்பற்படையின் சிறப்பு குழு!

Vetri Duraisamy: முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணியில் கப்பற்படையின் சிறப்பு குழு இணைந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 5:16 PM IST

Updated : Feb 8, 2024, 7:53 PM IST

கின்னூர்: கடந்த பிப்ரவரி 4 அன்று, இமாச்சலப் பிரதேச மாநிலம் கன்னூர் மாவட்டத்தின் பங்கி நாலாவின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 5-இல் இருக்கும் சட்லஜ் நதியில் ஒரு கார் ஒன்று விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பயணித்து உள்ளனர்.

இந்த இருவரில் ஒருவர், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி ஆவார். இதனையடுத்து, இந்த விபத்தில் சிக்கிய உள்ளூர் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். அதேநேரம், வெற்றி துரைசாமி உடன் சென்ற கோபிநாத் என்பவர் காயங்கள் உடன் மீட்கப்பட்டு, தற்போது சிம்லாவில் உள்ள ஐஜிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, வெற்றி துரைசாமியைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. அந்த வகையில், நேற்று கன்னூரை அடைந்த கப்பற்படையின் சிறப்பு குழுவினர், வெற்றி துரைசாமியைத் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு தேடுதல் பணியில் இறங்கி உள்ள மீட்புக் குழுவானது, போவாரி அருகே உள்ள நீர்மின் திட்டம் சுரங்கம் அருகே வலை அமைத்துள்ளது.

மேலும், இமாச்சலில் நிலவும் கடும் குளிரால் அங்கு மைனஸ் வானிலை நிலவுகிறது. இந்த மீட்புப் பணியில் இமாச்சல் காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்துறை அதிகாரிகள் ஆகியோர் பணியாற்றி வருவதாக அம்மாவட்ட துணை ஆணையர் தெரிவித்து உள்ளார்.

மேலும், இன்று இணைந்துள்ள கப்பற்படையின் சிறப்புக் குழுவினர், தேடும் பகுதியை 3 முதல் 5 வரை பிரித்து, ஆற்றின் பல்வேறு பகுதிகளில் தேடி வருவதாக கின்னூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் அமித் குமார் ஷர்மா கூறி உள்ளார். மேலும், இவர்கள் உடன் இமாச்சலின் சுந்தேர்நகர் டைவர்ஸ்களும் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, வெற்றி துரைசாமி குறித்த தகவல் தெரிவிப்போருக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்ததையும், கின்னூர் மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் நிலை என்ன? - இமாச்சல் போலீசாரின் விளக்கம்!

Last Updated : Feb 8, 2024, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.