தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை, சுந்தரம் நகர் அருகே திருமகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆசிரியர்களின் ஆலோசனையால், இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சய்ராஜ், மின்சார பயன்பாட்டை குறைப்பதற்கான சாதனத்தை செயற்கை நுண்ணறிவு ( AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்.
இந்த சாதனத்தின் மூலமாக, அறையை விட்டு வெளியே செல்லும் நபர் மின் விளக்கை அணைக்காமல் சென்று விட்டால், அவர்கள் செல்வதை சிறிய கருவி, சென்சார் மூலம் உணர்ந்து தானாகவே மின்விளக்குகள் அணையும்படியும், நபர் உள்ளே சென்றால் சென்சார் மூலம் மீண்டும் மின்விளக்கு எரியும்படியும் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து மாணவன் சஞ்சய்ராஜ் கூறுகையில், “என்னுடைய கண்டுபிடிப்பு Artificial Intelligence based light controlling system. சிறிய சென்சார் மூலம் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம். இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
இந்த சென்சாரின் மூலமாக மின்சாரம் வீணாவதை கட்டுப்படுத்த முடியும். இவற்றை நாம் மருத்துவமனை, பள்ளிகள், நூலகம் போன்ற இடங்களில் நாம் பயன்படுத்தலாம். மின்சாரம் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த சென்சாரை பயன்படுத்துவதன் மூலமாக, தமிழ்நாடு மின்சார பயன்பாட்டில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த சாதனத்திற்கு அரசு சார்பில், வரவேற்பு அளித்தால் பெரிய அளவில் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்ப்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டி! - Virudhunagar Bjp Candidate