ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ரெண்டாடிகிராமத்தில் மேட்டுத் தெருவில் வசிப்பவர் மணிவேல் - சாந்தி தம்பதியினர், இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களது மூத்த மகளான நிகிதா, ரெண்டாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் உறக்க செல்லும் போது, நிகிதாவும் உறங்கச் சென்றுள்ளார். பின்னர் நடு இரவில் பெற்றோர்கள் எழுந்து பார்த்த பொழுது மகள் நிகிதா காணவில்லை. இதனையடுத்து இரவு முழுவதும் மாணவியைத் தேடி அவர்களது பெற்றோர்கள் தேடியுள்ளனர்.
பின்னர் மறுநாள் காலை வீட்டில் அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் மாணவி சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவர்களது பெற்றோர்கள் கதறி அழுதனர். பின்னர் இது குறித்து சோளிங்கர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த போலீசார், உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-07-2024/22025439_wha.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கோர விபத்து.. கரூரில் ஒரே குடும்பத்தை 3 பேர் பலி; இருவர் படுகாயம்!