ETV Bharat / state

தேனியில் வெறிநாய் கடித்து பள்ளிச் சிறுவன் உட்பட 10 பேர் காயம்! - Dog Bite Issue - DOG BITE ISSUE

Dog Bite Issue at Theni: தேனி, மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதிகளில் நேற்று இரவு வெறிநாய் கடித்ததில் பள்ளிச் சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாய் (கோப்புப்படம்)
நாய் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 10:25 AM IST

தேனி: போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குப்பட்ட மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியான ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டி, கருமத்துப்பட்டி ஆகிய பகுதிகள் வெறிபிடித்த தெருநாய் சுற்றுத் திரிவதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய் கடித்ததாகவும், அதில், 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, அந்த நாய் பள்ளி சிறுமி அழகுதேவியை காலிலும், காளியம்மாள் என்ற மூதாட்டியின் கை மற்றும் கால்களிலும் கடித்துக் குதறியதுடன், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த சுருளி(50) என்ற முதியவரின் காலிலும் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அனைவரும் அப்பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் வெறிநாய் கடிக்குச் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, சாலையில் சென்று கொண்டிருந்த தீபக் என்ற பள்ளிச் சிறுவனை இடது பக்க மார்புப் பகுதியில் கடித்துள்ளது. அதில், காயமடைந்த சிறுவன் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது, 10க்கும் மேற்பட்ட நபர்களைக் கடித்த அந்த நாய் எங்கே சென்றது எனத் தெரியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், இரவு நேரங்களில் சாலைகளில் கொட்டப்படும் கோழிக்கழிவு மற்றும் இறைச்சிக் கழிவுகளை உண்ணத் தெருநாய்கள் ஒன்று கூடி சண்டையிட்டுத் திரிவதால், வேலை முடிந்து இரவில் வீட்டிற்குத் திரும்பும் பெண்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, வெறி நாய்களைக் கண்டறிந்து மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெறிநாய் கடிக்கு உட்பட்ட நபர்கள் ரேபிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதால், அதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மாதத்தில் மட்டும் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்கள் நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: “ஏர்போர்ட்ல எல்லாம் பிரஸ் மீட் தர முடியாது”.. அண்ணாமலை சொல்லும் ரீசன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.