ETV Bharat / state

“பெண் காவலர்கள் தாக்கினார்களா?”.. நீதிமன்றத்தில் முறையிட்ட சவுக்கு சங்கர்! - savukku shankar assaulted - SAVUKKU SHANKAR ASSAULTED

Savukku Shankar has alleged on women police: கோவையில் இருந்து தன்னை திருச்சி அழைத்து வரும் வழியில், 5 பெண் காவலர்கள் தன்னை கடுமையாக தாக்கியதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharatசவுக்கு சங்கர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட புகைப்படம்
Etv Bharatசவுக்கு சங்கர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 4:11 PM IST

சவுக்கு சங்கர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வீடியோ (Credits to ETV Bharat Tamil Nadu)

திருச்சி: கோவை சிறை கண்காணிப்பாளர் தன்னை தாக்கி கையை உடைத்துவிட்டதாக சவுக்கு சங்கர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று (மே15) திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பெண் காவலர்கள் தன்னை மீண்டும் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். திருச்சி மாவட்ட முசிறி டிஎஸ்பி யாஸ்மீன் கொடுத்த புகாரின் பேரில், சைபர் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த மே 10ஆம் தேதி இரவு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டு, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை கோயம்புத்தூரில் இருந்து அழைத்து வந்த போலீசார், அவரை பலத்த பாதுகாப்புடன், இன்று காலை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இதன் காரணமாக நீதிமன்றம் முழுவதும், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது 50க்கும் மேற்பட்ட பெண்கள், ‘சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாகப் பேசி வரும் சவுக்கு சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்’ என கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து, அவர் திருச்சி 3வது முதன்மை குற்றவியல் நடுவர் ஜெயபிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ஏற்கனவே தன்னுடைய கை உடைக்கப்பட்டு, அதற்கு மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கான மருந்து, மாத்திரைகளைக் கூட வழங்காமல், தன்னை பெண் காவலர்கள் தாக்கியதாகவும், மேலும் தாக்கும்போது அதனை புகைப்படம், வீடியோ எடுத்து காவலர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து கொண்டதாகவும், சவுக்கு சங்கர் நீதிபதியிடம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் தனக்கு கை, உடம்பெல்லாம் வலிப்பதாகவும், தனக்கு உடனடியாக சிகிச்சை வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து பெண் காவல் ஆய்வாளரை அழைத்து நீதிபதி கேட்டபோது, சவுக்கு சங்கர் பொய் சொல்வதாகவும், அப்படி யாரும் அவரை தாக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும், உணவு உண்ண அழைத்தும், அவர் வர மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கோவை சிறைக் கண்காணிப்பாளர் தன்னை தாக்கி கையை உடைத்துவிட்டதாக சவுக்கு சங்கர் சொல்லி வரும் நிலையில், தற்போது பெண் காவலர்கள் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டை அவர் முன் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவி செய்கிறேனா? -மனம் திறந்த KPY பாலா! - Actor KPY Bala

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.