ETV Bharat / state

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி எப்போது முடியும்? - சசிகலா கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! - sasikala about vck maanaadu - SASIKALA ABOUT VCK MAANAADU

மதுவிலக்கு மாநாட்டில் திமுக கலந்து கொள்வது என்பது மக்களையே ஏமாற்றும் ஒன்றாகும். அவர்கள் கூட்டணி கட்சியையும் ஏமாற்றுகிறார்கள் என சசிகலா திமுகவை விமர்சித்துள்ளார்.

சசிகலா பேட்டி
சசிகலா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 8:45 PM IST

சென்னை: பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெண்களுக்காக குரல் கொடுத்தவர் பெரியார். பெண்கள் முன்னேற்றம் அடைவதற்கு அடித்தளம் இட்டவர் பெரியார். அதிமுகவின் மாபெரும் இரு தலைவர்களும் பெரியாரின் கருத்தை பின்பற்றியே நடந்தார்கள்.

சென்னையில் மெட்ரோ திட்டத்தால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் மிகவும் அவதியுறுகிறார்கள். கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் அனைவரும் கடினத்துடன் செல்கின்றனர். அதை முறைப்படுத்த தான் நான் அரசை மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறேன்.

நான் திமுக ஆட்சியை குறை சொல்லவில்லை. மக்கள் சிரமமில்லாமல் செல்வதற்கு அரசு முறையாக மெட்ரோ பணியை செய்து தர வேண்டும் என சொல்லி வருகிறேன். தமிழகத்தில் நிதி நிலை சரியில்லை. அவர்களால் மெட்ரோ பணியை மத்திய அரசு துணை இல்லாமல் செய்து கொடுக்க முடியாது.

சட்டசபையில் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அந்த துறைக்கு முழுமையாக செலவிடப்படுவதில்லை என்பதால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசிடம் நிதி இல்லாத காரணத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம் வழங்கப்படாமலும், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் வழங்கப்படும் நிதியை வழங்குவதில்லை.

இதையும் படிங்க : “விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டு இருக்கிறார்!" - தமிழசை சௌந்தரராஜன் விமர்சனம் - Tamilisai Soundararajan on Vijay

திமுக மக்களுக்கான திட்டத்தை கொண்டு வராமல் கட்சிப் பணிகளை மட்டும் கவனம் செலுத்துகின்றனர். ஊடகங்களை திமுக அரசு மிரட்டி வருகிறது. பேச்சு சுதந்திரம் என மேடைக்கு மேடை பேசும் திமுகவினர் எல்லாரையும் அடக்கி ஆள வேண்டும் என நினைக்கிறார்கள்.

சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்து உள்ளது. பட்டப்பகலில் திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் திமுக கொடி போட்ட காரில் ஆடுகளை திருடி செல்கின்றனர். காவல்துறை யாரும் வர கூடாது என்பதற்காக திமுக கொடி போட்டு திருடுகின்றனர். மதுவிலக்கு மாநாட்டில் திமுக கலந்து கொள்வது என்பது மக்களையே ஏமாற்றும் ஒன்றாகும். அவர்கள் கூட்டணி கட்சியையும் ஏமாற்றுகிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைக்கும் பணிகள் முடிவடையும். 2026ம் ஆண்டு நிச்சயமாக அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமையும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது சரியாக இருக்காது" என்று சசிகலா தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.