ETV Bharat / state

வானதி சீனிவாசனுக்கு எதிராக அவதூறு கருத்து.. சைதாப்பேட்டை நீதிமன்றம் இருவருக்கு நூதன தண்டனை! - Vanathi srinivasan - VANATHI SRINIVASAN

Vanathi srinivasan defamation case: கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்தவருக்கு, நீதிமன்றம் கலையும் வரை நீதிமன்ற அறையில் நிற்க வேண்டும் என சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வானதி சீனிவாசன்( கோப்புப் படம்)
வானதி சீனிவாசன்( கோப்புப் படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 9:46 AM IST

சென்னை: ஸைலாக் என்ற சீன நிறுவனத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக பாஜக மகளிர் பிரிவு தேசிய தலைவரும், தற்போதைய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மீது முன்னாள் ரயில்வே ஊழியர் சங்கரநாராயணன் என்பவர் வாட்ஸ் அப், எக்ஸ்(X) மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வீடியோ வெளியிட்டார்.

இது தொடர்பாக பாஜக மகளிர் பிரிவு தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கடந்த 2017ம் ஆண்டு சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், "ஆதாரம் இல்லாமல் போலியான கருத்துக்களை வெளியிட்டு சமூகத்தில் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட சங்கரநாராயணன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டது.

இதுபோல, பாஜக நிர்வாகியாக இருந்த பாலசுப்ரமணியன் ஆதித்யன் என்பவரும் கருத்து தெரிவித்ததால், அவர் மீதும் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியாக வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருக்குமரன், அவதூறு பரப்பவே இதுபோன்ற கருத்துக்களை பரப்பியதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் அனிதா ஆனந்த் வழங்கிய தீர்ப்பில், "இருவர் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறு சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவதூறு கருத்து பரப்பியதற்காக இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.நீதிமன்றம் மாலை (ஜூலை 25) கலையும் வரை நீதிமன்றத்திலேயே நிற்க வேண்டும் என தண்டனை விதிக்கப்படுகிறது.

இருவரின் வயதையும் கருத்தில் கொண்டு இருவருக்கும் சிறை தண்டனை விதிக்காமல் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்" நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குப்பைக் கிடங்கில் இருக்கும் பிளாஸ்டிக்கை உண்டு உயிரிழக்கும் யானைகள்.. வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.