ETV Bharat / state

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய தேப்பனந்தல் மாட்டுச்சந்தை; ரூ.2 கோடிக்கு வர்த்தகம்; விவசாயிகள் உற்சாகம்!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தேப்பனந்தல் மாட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

தேப்பனந்தல் மாட்டுச்சந்தை
தேப்பனந்தல் மாட்டுச்சந்தை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 11:08 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்தில் கடந்த 71 ஆண்டுகளுக்கு மேலாக வாரந்தோறும் சனிக்கிழமை தேப்பனந்தல் (கேளுர்) கூட்ரோடு அருகில் உள்ள மைதானத்தில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் இந்த மாட்டுச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.

அதை போல், இந்தாண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேப்பனந்தல் மாட்டுச்சந்தை களைகட்டியது. இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி, களர் மற்றும் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வந்து குவிந்தன. வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யபட்டும் மாட்டுச்சந்தை அமோகமாக நடைபெற்றது.

இதையும் படிங்க: ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய சென்னியம்மன் கோயில்.. கரையோரத்தில் அம்மனை வைத்து தரிசிக்கும் பக்தர்கள்!

இந்நிலையில் வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று நடைபெற்ற மாட்டுச்சந்தைக்கு விடியற்காலை முதலே மாட்டு விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கவும், விற்பனை செய்யவும் குவிய தொடங்கினார்கள். இச்சந்தையில் சில விவசாயிகள் தீபாவளி கொண்டாடுவதற்காக தன் வீட்டில் வளர்த்த மாடுகளை இச்சந்தையில் விற்பனை செய்தனர்.

மழையால் மாட்டுச்சந்தை வியாபாரம் சில வாரங்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற மாட்டுச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.