ETV Bharat / state

ஸ்பெயினின் ரோக்கா நிறுவனம் தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு!

CM Stalin Official Trip to Spain: ஸ்பெயினின் புகழ் பெற்ற ரோக்கா நிறுவனம் புதிதாக மற்றும் ஏற்கனவே உள்ள நிறுவனங்களை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக 400 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.

புகழ்பெற்ற ரோக்கா நிறுவனம் தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 5:14 PM IST

Updated : Feb 1, 2024, 6:31 AM IST

புகழ்பெற்ற ரோக்கா நிறுவனம் தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அந்த நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில், கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் உரையாடினார்.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (ஜன. 30) ஸ்பெயின் நாட்டின் பல முன்னனி நிறுவனங்களின் நிர்வாகிகளை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து, தமிழகத்தில் முதலீடுகள் செய்ய முன் வரும்படி அழைத்திருந்தார். அதன்படி ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரஃபேல் மேடியா மற்றும் மானுவல் மன்ஜோன் வில்டா மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பின் போது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.

மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால், இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்று மு.க ஸ்டாலின் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லோஸ் வெலாஸ்குவேஸ், இந்திய இயக்குநர் நிர்மல் குமார் ஆகியோர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது, ரோக்கா நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில் பெருந்துறையிலும், ராணிப்பேட்டையிலும் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனையை மேலும் உயர்த்திடவும், சர்வதேச ஏற்றுமதிக்காகவும், இதன் விரிவாக்கத்தையும் புதிய தொழில் அலகுகளையும் தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொண்டது. இத்துறையில் முதலீடு செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தமிழ்நாட்டில் நிலவி வரும் சாதகமான சூழல் பற்றி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கினார்.

இந்த சந்திப்பின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும், பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன்வந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கூடுதலாக 200 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சந்திப்புகளின்போது, கைடன்ஸ் (Guidance) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "மகனாக நான் இருக்கிறேன்" - பூரணம் அம்மாளிடம் நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

Last Updated : Feb 1, 2024, 6:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.