ETV Bharat / state

தஞ்சாவூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த ஓவிய சந்தை.. 60க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்பு!

Art Road Show: தஞ்சாவூரில் நடைபெற்ற ஓவிய சந்தை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இதில் 60க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.

Road Art Show held at thanjavur
தஞ்சாவூரில் நடைபெற்ற ஓவிய சந்தை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 12:37 PM IST

தஞ்சாவூரில் நடைபெற்ற ஓவிய சந்தை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் தஞ்சாவூர் அரண்மனை கீழராஜ வீதியில் கடந்த பிப்ரவரி 16 முதல் 18ஆம் தேதி வரை, மூன்று நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் 7 மணி வரை ஓவியச் சந்தை சிறப்பாக நடைபெற்றது. இந்த ஓவியச் சந்தையானது ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான ஓவியங்களைப் பார்த்து ரசிக்கும் வகையிலும், சிறப்பாக ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்கள் முதல், வளரும் இளம் ஓவிய கலைஞர்கள் வரை 60-க்கும் மேற்பட்டோர், அரங்குகளில் தங்களது ஓவியக் காட்சிப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, கண்காட்சியாகவும் மற்றும் விற்பனையும் செய்தனர். இந்த ஓவியக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் சென்று பார்வையிட்டு ரசித்தார்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கலை ஆர்வலர்கள், எழிற்கலைஞர்கள் மற்றும் குடும்ப தலைவிகளுக்கான கலைத்திறன் போட்டியும் நடைபெற்றது. மேலும், தஞ்சாவூர் ஓவிய பயிலரங்கம், நவீன ஓவிய பயிலரங்கம், கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்களின் சிற்ப வடிவமைப்பு மற்றும் சித்திரப் பிரதிமை நிகழ்வுகள் ஆகியவையும் நடைபெற்றது.

சோழ மன்னர்கள், நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் காலத்து ஓவியங்கள் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை சுவர் நுழைவாயில் முதல் இரண்டாவது நுழைவாயில் வரை, 500 அடிக்கு இருபுறமும் கண்கவர் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், ஓவிய கண்காட்சியுடன் வீணை, வயலின் மற்றும் சாக்ஸபோன் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிலையில், தஞ்சாவூர் ஓவியச் சந்தையில் கலை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு, கண்காட்சியைக் கண்டு களித்தும், ஓவியங்களை வாங்கியும் சென்றனர். இதுகுறித்து ஓவியர் கொண்டல்ராஜ் (49) கூறுகையில், "நான் கடந்த 30 வருடமாக ஓவியம் வரையும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். லைன் ஓவியம், போட்டோ ஓவியம் லைவ் ஆக வரைந்து வருகிறேன்.

இது பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் உள்ள சிற்பங்களை வரைந்து, புத்தகமாக வெளியிட உள்ளேன். அதேபோல், பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிற்பங்களை ஓவியமாக வரைந்து புத்தகம் வெளியிடவும் ஆசை உள்ளது" எனக் கூறினார். ஓவியர் கொண்டல்ராஜ் ஓவிய சந்தை நிகழ்ச்சியில் சாக்ஸபோன் வாசித்த இசைக் கலைஞரை, குறைந்த நேரத்திலேயே லைவ் ஆக வரைந்து அசத்தினார். இது பலரின் பாராட்டையும் பெற்றது.

இதேபோல் ஓவியர் ஜோன்ஸ் இமானுவேல் (30) கூறுகையில், "பாண்டிச்சேரியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள காடுகள், வயல்கள், தோப்புகள் ஆகியவற்றுக்குச் சென்று, அங்கேயே இம்பாஸ்டோ நுட்பம் (impasto painting) முறையில் Outdoor ஓவியங்களை வரைந்துள்ளேன். இதற்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்றார். இந்த ஓவியச் சந்தை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இண்டாக் கௌரவ செயலாளர் முத்துக்குமார் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தமிழ் புதல்வன் திட்டம்' இனி மாணவர்களுக்கு மாதம் 1000 - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.