ETV Bharat / state

நெல்லையில் சுற்றிய பஞ்சாப் மேன்.. 13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்தது எப்படி? - Vijayanarayanam Naval Base

பஞ்சாப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் 13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நிலையில், திருநெல்வேலியில் உள்ள விஜயநாராயணம் கடற்படை தளம் அருகே மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பஞ்சாப் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர்
குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பஞ்சாப் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 6:21 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், விஜயநாராயணம் கடற்படை தளம் அருகே கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சாலையில் சுற்றித் திரிந்த முதியவர் ஒருவரை விஜயநாராயணம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவராக தெரிந்ததால், அவரை முதலில் பாதுகாப்பாக நாங்குநேரியில் உள்ள அரசன் முதியோர் மற்றும் பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியைச் சேர்ந்த கந்தர்வ்சிங் (73) என்பதும், அவர் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் என்பதும் தெரிய வந்துள்ளது. அவரது முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை ஒன்றில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி, சுமார் 4,000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றித் திரிந்து தமிழகம் வந்ததுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, விஜயநாராயணம் போலீசார் பஞ்சாப் எல்லையில் உள்ள பதான்கோட் பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில், கடந்த 2011ஆம் ஆண்டு பதான்கோட் காவல் நிலையத்தில் கந்தர்வ் சிங் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த அவரது மகன்கள் அணில் சிங் மற்றும் சுனில் சிங் ஆகியோர் குடும்பத்தினருடன் கந்தர்வ் சிங் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களைக் காண்பித்து, கிடைக்கப்பட்டது தங்களது தந்தை தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, இருவரும் விமானம் மூலம் சென்னையை அடைந்து அங்கிருந்து விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு நேற்று (செப்.28) வந்துள்ளனர். அதன்பின், போலீசார் அவர்களை கந்தர்வ்சிங் தங்கி இருந்த நாங்குநேரி முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவரை அடையாளம் காட்டினார்.

இதையும் படிங்க: 9-ம் வகுப்பு மாணவரின் வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சம்.. பதறிய ராஜஸ்தான் நபர்.. சேலத்தில் நடந்தது என்ன?

அப்போது தனது மகன்களைக் கண்ட கந்தர்வ்சிங், குடும்பத்தின் பிரிவு துயரத்தை வெளிப்படுத்தி கண்ணீர் விட்டு அழுதார். மேலும், அவரது இரு மகன்களும் பாசத்தில் தந்தையை கட்டியணைத்து அழுத காட்சி அங்கு இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

இதன் பின்னர் கந்தர்வ்சிங், அவரது மகன்கள் வாங்கி வந்த உடைகளை மகிழ்ச்சியுடன் மாற்றிக் கொண்டு அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 13 ஆண்டுகள் கழித்து தங்களது தந்தை உயிருடன் கிடைத்தது எங்களது பாக்கியம் என கந்தர்வ்சிங்கின் மகன்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், இதற்காக முயற்சி எடுத்த விஜயநாராயணம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாககுமாரி மற்றும் போலீசாருக்கு அப்பகுதியினர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.