நீலகிரி: உதகை கேத்தி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை லாரிகள் மூலம் வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டுவரப்படுகின்றன. இங்கு பிளாஸ்டிக், ரப்பர், காய்கறி கழிவுகள், மின்பொருட்கள் உபகரணங்கள் போன்ற குப்பைகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனி தனியை பிரித்தெடுகின்றனர்.
குப்பை டூ இயற்கை உரம்: பின் இந்த மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை உரங்களை விவசாயிகள் விரும்பி ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கிலோ ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் உரத்தால் மலைத் தோட்ட காய்கறிகள் அதிகளவில் மகசூலை பெற முடிவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
சிறந்த சுற்றுலா கிராமம் விருது: மத்திய அரசு கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட உல்லாடா கிராமத்திற்கு சிறந்த சுற்றுலா கிராமம் விருதை வழங்கியுள்ளது. இந்த கிராமத்தின் கேத்தி பகுதியை குப்பைகள் இல்லாத நகரமாக மாற்றவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கேத்தி பேரூராட்சியின் தலைவர் ஹேமா மாலினி மற்றும் செயல் அலுவலர் நடராஜன் உள்ளிட்டோர் பல நடவடைக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குப்பையில் கலை: இதன் அடிப்படையில் குப்பைகளில் வீசப்படும் ரப்பர் டயர்கள், கழிப்பிட பீங்கான், கிரைண்டர், தலைக்கவசம் ஆகியவற்றில் வண்ணம் பூசப்பட்டு, அழகு படுத்தப்பட்டு, பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் இயற்கை சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் பூங்காவில் நாவல், கிவி, கொய்யா உள்ளிட்ட மரங்களும் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் நடவு பணியிலும் இறங்கிய வடமாநில தொழிலாளர்கள்.. 100 நாள் வேலையால் விவசாயம் பாதிப்பு?
கண்களை கவரும் வண்ணப் பூக்கள்: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பூங்காவில் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையில் அமரும் நாற்காலிகள், கண்களை கவரும் அரிய வகை மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டு புதிய பொழிவுடன், ஓய்வு எடுக்க தகுந்த இடமாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.
கிலோ ரூ.6க்கு இயற்கை உரம்: இது குறித்து பேசிய துப்புரவுத் தொழிலாளி பழனி, “நாங்கள் இங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்போம். பின்னர் மக்கும் குப்பைகளில் மாட்டுச் சானம் மற்றும் மனித கழிவு நீரை சேர்ப்போம். இவ்வாறு செய்வதால் 3 மாதத்தில் மக்கும் குப்பைகள் 1 மாதத்தில் மக்குகிறது. அதை வைத்து உரம் தயாரிப்போம்.
இந்த உரத்தை கேத்தி கிராமத்தில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் விரும்பி வாங்கி செல்கின்றனர். விவாசாயிகள் இந்த உரத்தை டன் கணக்கில் வாங்கி சென்கின்றனர். ஒரு வாரத்திற்கு 4 முதல் 5 டன்கள் உரம் விற்கபடுகிறது. ஒரு கிலோ இயற்கை உரம் 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
விலை குறைவு, விளைச்சல் அதிகம்: இதனைத் தொடர்ந்து பேசிய இயற்கை வியசாயி சிவா, “நான் நீண்ட காலமாக நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். இந்த வளம் மீட்பு பூங்காவில் தான் உரம் வாங்கி எனது விவசாய நிலத்தில் போடுகிறேன். இதனால் எனக்கு விளைச்சல் அதிகமாக கிடைப்பதோடு ஆரோக்கியமான காய்கறிகளையும் விளைவிக்க முடிகிறது. மேலும் ரசாயண உரங்களோடு ஒப்பிட்டால் இந்த இயற்கை உரங்கள் விலையும் குறைவு, விளைச்சலும் அதிகமாக இருக்கிறது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்