ETV Bharat / state

கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பா? விழுப்புரத்தில் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்..! - woman death

Woman death in Villupuram: விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த நிலையில் தவறான சிகிச்சையால் தான் பெண் உயிரிழந்துள்ளதாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 6:11 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள அரியலூர் திருக்கை ஊராட்சிக்கு உட்பட்ட டட் நகரைச் சேர்ந்தவர் ஜெனிபர். இவருக்குத் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளான நிலையில் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் ஜெனிபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கர்ப்பப்பை குழாயில் அடைப்பு இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து ஜெனிப்பருக்கு நேற்று கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் ஜெனிபர் உயிரிழந்ததாக உறவினர்களுக்குத் தெரிய வந்த நிலையில் மருத்துவமனையில் ஜெனிபருக்கு தவறான சிகிச்சை செய்யப்பட்டதால், உயிரிழந்ததாகக் கூறி ஜெனிபரின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஆம்பூரில் பட்டியல் சமூக இளைஞர் மீது சரமாரி தாக்குதல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!

தகவலின் பேரின் வந்த விழுப்புரம் நகர போலீசார் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிக்கப்பட்டு மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜெனிபர் சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “ சிகிச்சையில் எந்த தவறும் இல்லை அவருக்கு உடலில் ஏற்கனவே இருந்த சர்க்கரை நோய் காரணமாக உயிர் இழந்திருக்கலாம். உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து எங்கே தவறு நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து ஜெனிபர் உடலை வாங்க மறுத்து மீண்டும் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுப் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.