ETV Bharat / state

பொங்கல் பரிசுத் தொகையுடன் ரேசன் கடை ஊழியர் தலைமறைவு! ரூ.1.22 லட்சம் எங்கே போனது? போலீசார் விசாரணை! - Ration Worker abscond pongal cash

கோவையில் பொங்கல் பரிசு தொகை 1.22 லட்ச ரூபாயினை பொது மக்களுக்கு வழங்காமல் பணத்துடன் தலைமறைவான ரேஷன் கடை ஊழியர் குறித்துது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Ration Worker Abscond with pongal cash in covai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 12:56 PM IST

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் கடந்த 10ஆம் தேதி முதல் பொது மக்களுக்கு பொங்கள் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள 11 லட்சத்து 4 ஆயிரத்து 942 குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்க சம்மந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களிடம் பணம் வழங்கப்பட்டிருந்தது.

இதில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 876 குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 73 ஆயிரத்து 66 கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தந்த ரேஷன் கடை பொறுப்பாளர்கள் மீதமுள்ள தொகையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அமுதம் அங்காடி என்ற ரேஷன் கடை ஊழியர் மதியரசு என்பவர் பொங்கல் பரிசு தொகை மீதத் தொகையை திரும்ப செலுத்தாதது தெரிய வந்தது. இது குறித்து அமுதம் அங்காடியில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 841 குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில், 719 பேருக்கு முறையாக பணத்தை கொடுத்து இருப்பதும், 122 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்காமல் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து 1.22 லட்சம் பொங்கல் பரிசுத்தொகை பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில் , ஊழியர் மதியரசு பணத்துடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது குறித்து கடை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மதியரசு மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: "அதிமுக என்ற மாபெரும் இயக்கத்திற்காக தவழ்ந்தும், ஓடியும் உழைத்தவர் எடப்பாடி பழனிசாமி" - கடம்பூர் ராஜு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.