ETV Bharat / state

"கோவைக்கு எது அவசியம், எது அவசரம் என்று கேட்டறிந்து செயல்படுவேன்" - புதிய மேயர் ரங்கநாயகி உறுதி! - coimbatore new mayor - COIMBATORE NEW MAYOR

Coimbatore New Mayor: கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர்கள் முன்னிலையில் மேயர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

கோவை மேயர் ரங்கநாயகி
கோவை மேயர் ரங்கநாயகி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 3:31 PM IST

Updated : Aug 6, 2024, 5:22 PM IST

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்று (ஆக.6) மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணியின் சார்பில் மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டிருந்தார். அதன்படி இன்று காலை 10 மணி அளவில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் அனைவரும் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்தனர்.

புதிய மேயர் ரங்கநாயகி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

காலை 10:30 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட ரங்கநாயகி மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. பின்னர் கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகியிடம் வழங்கினார். சக கவுன்சிலர்கள் மேயருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் வந்தனர். மேயர் அமைச்சர்கள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதன்பின் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கே.என்.நேரு ஆகியோர் ரங்கநாயகியை மேயருக்கான இருக்கையில் அமர வைத்து செங்கோலை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரெங்கநாயகி,"எனக்கு இந்த பதவியை அளித்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக மாவட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். எனக்கு எனது வார்டை பற்றி தான் தெரியும். இனி அனைவருடனும் கலந்து ஆலோசித்து எது அவசியம், எது அவசரம் என்பதை கேட்டு செயல்படுவேன்" எனத் தெரிவித்தார்.

கோவை மக்களுக்கு என்ன திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என்ற கேள்விக்கு, "நான் இப்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். எனது பணிகள் பற்றி படிப்படியாக தெரிந்து கொண்டு செயல்படுவேன். நான் செய்வதை உங்களுக்கு தெரியப்படுத்துவேன். மக்களின் தேவைகளை கேட்டறிந்து செயல்படுவேன்" என்றார்.

முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,"கோவை மாநகராட்சியில் புதிதாக மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணிகளுக்கு உறுதுணையாக இருப்போம். கோவை மாநகராட்சிக்கு நிறைய பணிகளை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சாலை, குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம். மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டுள்ளார்கள். அதையும் நிறைவேற்ற பாடுபடுவோம். சிறுவாணி மற்றும் ஆழியார் அணை பிரச்னைகள் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு..கோவையில் மீண்டும் ஓங்கிய செந்தில் பாலாஜியின் கை! - coimbatore new mayor

Last Updated : Aug 6, 2024, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.