ETV Bharat / state

ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வலியுறுத்தி நெல்லை காங்கிரஸ் சார்பில் தீர்மானம்! - 2024 lok sabha election

Tirunelveli Congress: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என திருநெல்வேலி காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 2:10 PM IST

திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. குறிப்பாகத் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் இரு கட்சிகளுக்கு இடையே இன்னும் சுமுக உடன்பாடு எட்டப்படாததால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இருப்பினும் இன்னும் ஒரு சில தினங்களில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

இதற்கு முன்னதாக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. அந்த வகையில் திருநெல்வேலி கிழக்கு மாநகர் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி மனோகரன், பழனி நாடார் உள்படப் பல முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

இதில் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளை நிர்வாகிகள் வழங்கினர் செல்வபெருந்தகை. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியைக் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் ஆகிய இரண்டு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. நாடளுமன்றா தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்தி தங்கள் தொகுதியில் போட்டியிட நிறைவேற்றி வருகின்றன.

ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட நிலையில், இந்த முறை தெலங்கானா மாநிலத்தில் கம்மம் அல்லது புவனகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியேறினாலும் ஓட்டு விழாது" - திமுக எம்.பி கனிமொழி விளாசல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.