ETV Bharat / state

இனி பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம்.. சோதனை அடிப்படையில் செயல்படுத்த திட்டம்! - Food Supply Department New Scheme - FOOD SUPPLY DEPARTMENT NEW SCHEME

Distribution Of Ration Goods Through Packets: ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்வது குறித்து சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 3:27 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், கடைகளில் உள்ள விலையை விட ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில், ரேஷனில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.25க்கும், துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனை சரிசெய்யும் வகையில், ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழிமுறையை மேலும் அதிகரிக்கும் வகையில், தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்யப்பட்டு சோதனை அடிப்படையில் ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்வது குறித்து சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து திட்டத்தைத் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் வரவேற்பை பொறுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை விரிவுபடுத்த உணவுப்பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர்கள் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.