ETV Bharat / state

சவுக்கு சங்கர் பேட்டி விவகாரம்: ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது - டெல்லியில் தமிழக போலீசார் அதிரடி - Youtuber felix gerald arrested

Youtuber Felix Gerald: சவுக்கு சங்கர் நேர்காணல் அளித்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

arrest related photo
கைது செய்யப்பட்டது தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu (File Image))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 10:12 AM IST

சென்னை: பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் கடந்த 4ஆம் தேதி, சைபர் கிரைம் போலீசார் யூடியூபர் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை சென்னை குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற முதன்மை நீதிபதி, சவுக்கு சங்கரை 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் நேர்காணல் அளித்த விவகாரத்தில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தனியார் யூடியூப் சேனலை சேர்ந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, 2022-இல் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது பெண்கள் பற்றி இழிவாக பேசியதற்காக சைபர் கிரைம் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி வெளியில் இருந்தார். தற்போது மீண்டும் பெண்கள் குறித்து தவறாக பேசிய வழக்கில், உயர்நீதிமன்றம் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை இரவு 11.30 மணி அளவில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். கோவை போலிசார் அவருக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில் திருச்சிக்கு அழைத்து வருவதாக போலிசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர்: பெண்கள் ஆவேசத்தால் பரபரப்பு! - SAVUKKU SHANKAR CASE LATEST UPDATE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.