ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. நெல்லையில் மேலும் ஒரு ஆசிரியர் பணிநீக்கம்! - Teachers dismissed for abuse case

நெல்லையில் உள்ள தனியார்ப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பள்ளி ஆசிரியர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 1:03 PM IST

திருநெல்வேலி: நெல்லையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அப்பள்ளியில் பயின்று வரும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர் ஓரினச் சேர்க்கை பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தது.

அந்த புகாரின் அடிப்படையில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த ராபர்ட் புரூஸ் என்ற நபர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், நிரந்தர ஆசிரியராகச் செயல்பட்டு வந்த நெல்சன் என்ற நபரையும் பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் இளம் பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொல்லை: இளைஞர் கைது..!

தற்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வரும் இப்பள்ளி பெருமை வாய்ந்ததோடு மட்டுமல்லாமல், அரசு உதவி பெற்று பள்ளியாகவும் இங்கு செயல்பட்டு வரும் நிலையில், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இவ்வாறு மாணவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டபோது, பாலியல் புகார்கள் வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தற்போது போலீசார் மற்றும் கல்வித்துறை ஆகியவை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.