ETV Bharat / state

"தனியார்ப் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு" - மாநிலச் செயலாளர் நந்தகுமார் - private school support nda - PRIVATE SCHOOL SUPPORT NDA

Private school Administrators and Teachers: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகத் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகச் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Chennai
சென்னை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 9:37 PM IST

சென்னை: தனியார்ப் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாகத் தனியார்ப் பள்ளிகள் சங்க மாநிலச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுமைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் முழு மனதோடு ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்வோம்.

பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தனித்தனியாகவோ வாட்ஸப் குழுக்கள் மூலமாகவோ நேரடியாகவோ சந்தித்துப் பேசி ஒரு கோடி ஓட்டுக்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அனைத்து வாக்குகளையும் பெற்றுத் தருவோம்.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று பாரத தேசத்தை மீண்டும் ஆள வேண்டும். அப்பொழுதுதான் பாரத தேசம் பாதுகாப்பாக இருக்கும். போரில்லா பாரதமாகவும் தெய்வ பக்தியும் தேச பக்தியும் மிக்கவர்களாக நம்நாட்டை உயர்த்த முடியும்.

நம் மக்கள் அனைவரும் அச்சமின்றி நிம்மதியாக நோய் நொடி இன்றி வாழ முடியும். நம் நாட்டு மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய முடியும். சுயச் சார்புடன் நமது தொழில்களை நாம் செய்து நம் சந்ததியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டுப் பாதுகாப்போடு வாழ வேண்டும் என்றால் கடந்த 10 ஆண்டுகளில் எப்படி லஞ்ச லாவண்யம் இல்லாமல் பாரத தேசமே ஒரே குடும்பம் என கொடிய கரோனா தொற்று நோய் காலத்தில் 147 கோடி இந்திய மக்களைப் பாதுகாத்து நோய்க்கான மருந்து கண்டுபிடித்து மக்களுக்கு இலவசமாக வழங்கி மதவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து உலக அளவில் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திட பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மீண்டும் நல்லதொரு ஆட்சி அமைந்து உலகத்தின் விஷ்வகுருவாய் நாம் அனைவரும் உயர்ந்து ஒளி வீசிட முடியும்.

அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டுமானால் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்பட வேண்டும். மும்மொழி கல்விக் கொள்கையை அமுல் படுத்திட, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறந்திடவும், வேலைவாய்ப்பைப் பெருக்கிடவும், செய்யும் தொழில்கள் யாவும் சிறந்திடவும், சட்டம் ஒழுங்கை கட்டி காப்பாற்றி போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட லஞ்சம் ஊழல் கமிஷன் கலெக்ஷன் கரெப்க்ஷன் ஒழித்து உண்மையும் நேர்மையும் ஊழலும் இல்லா புதிய பாரத திருநாட்டைப் படைப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றிட இன்றே சபதம் ஏற்று நமது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்வோம்.

காரணம்.. இன்றைய திமுக அரசுதான்..

தரமான கல்வியைச் சீர்குலைக்கத் தனியார்ப் பள்ளிகளுக்கு எதிராகச் சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தது. தனியார்ப் பள்ளிகளுக்கு எதிராகக் கல்விக் கட்டண நிர்ணய குழுவைக் கொண்டு வந்து நம்மை நசுக்கியது. தனியார்ப் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு இரண்டு கழகங்களும் பல லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று தனியார்ப் பள்ளிகளை வாட்டி வதைக்கிறது.

பாரத தேசமே தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறபோது தமிழக அரசு மாநில கல்வித் திட்டத்தை அமல்படுத்துவோம் என வல்லுநர் குழு அமைத்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எதுவும் செய்யாமல் அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையும் பெற்றுக் கொள்ளாமல் இனிமேல் அறிக்கை வழங்கி பாடங்களை எழுதி அடுத்த ஆண்டு எவ்வாறு அமல்படுத்த முடியும்.

எனவே தமிழகத்தின் பெற்றோர்களும் மாணவர்களும் மிகவும் குழம்பிப் போய் சிபிஎஸ்இ பள்ளிகளுக்குப் போவதால் வசதி உள்ள பள்ளி நிர்வாகிகள் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்குவதால் நர்சரி பிரைமரி மெட்ரிக்பள்ளிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

ஆகவே இந்த தேர்தலில் ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் அனைவருக்கும் 100 சதவீதம் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரட்டி சாணத்தால் தாக்கும் விநோத திருவிழா.. ஆந்திராவில் உகாதியை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்! - Ugadi 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.