சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்கவும், கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, வங்கி தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளிவைக்கக் கோரிய மனுவில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை ஒருவரைகூட கைது செய்யாதது ஏன்?