ETV Bharat / state

பிரேமானந்தா அறக்கட்டளை வழக்கு: சொத்துக்கள் எப்படி வந்தது? நோட்டீஸை ரத்து செய்ய மறுப்பு! - PREMANANDA TRUST CASE

பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய, கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் தொடர்பான கோப்புப் படம்
நீதிமன்றம் தொடர்பான கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2024, 10:34 AM IST

சென்னை: ஆன்மீக ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா, 1994ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது ஆசிரமத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 76 லட்சம் ரூபாய்க்கான நிரந்தர வைப்பீடு, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், பிரேமானந்தாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதன் தொடர்ச்சியாக, கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக, 2005-ஆம் ஆண்டு பிரேமானந்தா அறக்கட்டளைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிர்த்து பிரேமானந்தா அறக்கட்டளை சார்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், நேற்று செவ்வாய்கிழமை (டிசம்பர் 10) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், "கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரேமானந்தா கடந்த 2011-ஆம் ஆண்டு சிறையில் இறந்து விட்டதாகவும், இந்நிலையில் அந்நிய செலவாணி மோசடி சட்டத்தின் கீழ் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக, சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

அறக்கட்டளையின் வரவு செலவுகள் குறித்து நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. 1950 முதல் 1980-ஆம் ஆண்டு வரையான அறக்கட்டளையின் வரவு, செலவு கணக்குகள் அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை தரப்பில் எந்த தவறும் இல்லை. விளக்கங்கள் அளிக்கப்பட்டும் 20 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: "அன்னிய செலாவணி மோசடி வழக்கின் குற்றப் பதிவில் சசிகலாவின் பெயர் மாற்றப்பட்டது ஏன்?" - உயர் நீதிமன்றம் கேள்வி!

இதையடுத்து, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "இந்த வழக்கில் கடந்த 2006-ஆம் ஆண்டே அறக்கட்டளை தரப்பினர் நேரில் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்து, விசாரணையிலும் பங்கெடுத்துள்ளனர். சட்ட விதிகளைப் பின்பற்றியே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதில் மோகன் என்பவர் சட்டவிரோதமான பணத்தில் தங்கம் வாங்கியுள்ளார். பத்மா என்பவர் பல இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். அது குறித்து விசாரணை செய்ய வேண்டும். சட்ட விரோதமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பலாம்.

சொத்துக்கள் அறக்கட்டளையின் கீழ் சேர்க்கப்பட்டிருப்பதால், அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விளக்கம் கேட்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சொத்துக்களை வாங்கியவர்கள் உயிரிழந்தாலும், அது எப்படி வாங்கப்பட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அது சட்டவிரோதமானதாக இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. சந்தேகம் இருப்பதாக அமலாக்கத்துறை கருதினால், விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது? அறக்கட்டளையின் விளக்கத்தை ஏற்க உரிய காரணம் இல்லை" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.