ETV Bharat / state

திடீர் பிரசவ வலி.. ஆண் பயணிகளே அந்தப் பக்கம் போங்க.. பரபரப்பான நிமிடங்கள்.. நடுவானில் நடந்தது என்ன? - child born in Flight on sky - CHILD BORN IN FLIGHT ON SKY

Child Born in Flight on Sky: சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இண்டிகோ விமானம் ( கோப்புப் படம்)
இண்டிகோ விமானம் ( கோப்புப் படம்) (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 3:25 PM IST

சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 179 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில், குடும்பத்தோடு பயணித்துக் கொண்டு இருந்த ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த தீப்திசரிசு வீர வெங்கட்ராமன் (28) என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து, தீப்தியின் குடும்பத்தினர் விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனர். பின் விமான பணிப்பெண்கள் தலைமை விமானிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடரந்து, தீப்தி இருந்த பகுதியில் உள்ள ஆண் பயணிகள் அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, அவசரமாக விமானத்துக்குள் ஒரு திரை தடுப்பை அமைத்த விமான பணிப்பெண்கள், விமானத்தில் பயணித்த பெண் டாக்டர் மற்றும் மூத்த பெண் பயணிகள், தீப்தி சரிசுக்கு பிரசவம் பார்த்தனர். விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோதே தீப்தி அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

விமான பணிப்பெண்கள் துரிதமாக செயல்பட்டு அந்த விமானத்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணியையும், அவர் குழந்தையையும் காப்பாற்றியதால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதற்கிடையே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்ததால், விமான நிலைய மருத்துவக் குழுவினர் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் விமானம் வந்து தரையிறங்கும் இடத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

விமானம் சென்னையில் தரையிறங்கியதும், உடனடியாக மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, தாயையும் குழந்தையையும் பரிசோதித்தனர். அதோடு தாயையும் குழந்தையையும் விமானத்திலிருந்து இறக்கி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அதன் பின்பு, விமானத்தில் உள்ள மற்ற பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்க அனுமதித்தனர். தீப்தி சரசு குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணிகளாக சிங்கப்பூர் சென்று விட்டு திரும்பி வரும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "நாங்களும் கோயம்புத்தூர் தான்" - கோவை - அபுதாபி விமான கேப்டன் வைரல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.