ETV Bharat / state

முல்லைப் பெரியாறு: கேரளா அரசை கண்டித்து மதுரையில் வருமான வரித்துறை ஆபிஸ் முற்றுகை - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு - PR Pandian - PR PANDIAN

Mullaperiyar Dam Issue: முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக ஆகிவிட்டதாக கூறி, கேரளா அரசு புதிய அணை கட்டுவதற்காக சட்டவிரோதமாக கொடுத்த விண்ணப்பத்தின் மீதாக ஆய்வு தொடங்க இருப்பதாகவும், இதனை தமிழ்நாடு அரசு மூடி மறைப்பதாகவும் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். இதனைக் கண்டிக்கும் விதமாக, மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 10:33 AM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, “தமிழ்நாடு முழுமையிலும் கோடை மழை பேரழிவு பெருமழையாகப் பெய்து நெல் சாகுபடி அடியோடு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், அழிய தொடங்கியுள்ளது. மாற்று பயிர் சாகுபடியை தமிழக அரசு வற்புறுத்தியதை ஏற்று பருத்தி சாகுபடி பெருமளவில் மேற்கொண்டனர்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

முதல் பட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், முழுமையாக அழிந்துவிட்டது. எள், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களும் அழிந்து போயிருக்கிறது. வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் முழுமையாக அழிந்துவிட்டன. தமிழ்நாடு அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி, பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. சிறப்பு அனுமதியை பெற்று உடனடியாக கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.

நெல் ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயும், பருத்திக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை (Mullaperiyar Dam) வலுவிழந்து விட்டதாக கூறி, புதிய அணை கட்டுவதற்காக கேரளா அரசு சட்டவிரோதமாக கொடுத்த விண்ணப்பத்தின் மீதாக ஆய்வு தொடங்க உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு மூடி மறைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

புதிய அணை கட்டப்பட்டால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் முற்றிலும் அழிந்துபோகும். மக்கள் அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்படும். குடிநீர் அடியோடு அழிந்துவிடும்.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் பலமுறை தீர்ப்பு சொல்லியும், கேரளா அரசு ஏற்க மறுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்பத்தை வழங்கி உள்ளது. இதனை மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தி (இன்று) மே 28 காலை 11 மணிக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றிப் பெறும்? - அண்ணாமலையின் கணிப்பு இதுதான்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.