ETV Bharat / state

சென்னையில் ஷவர்மா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழப்பா? போலீசார் தீவிர விசாரணை! - chennai teacher death - CHENNAI TEACHER DEATH

சென்னை மதுரவாயல் அருகே இளம்பெண் உயிரிழந்ததற்கு அவர் ஷவர்மா சாப்பிட்டது தான் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சுவேதா
உயிரிழந்த சுவேதா (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 8:14 PM IST

சென்னை: மதுரவாயல் அடுத்த வானகரம், நூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா (22). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் போரூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில், போரூரில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்த அவர் மீன் குழம்பு சாப்பிட்டு உள்ளார். இதனையடுத்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் விசாரணை திருப்தியாக இல்லை" - பகுஜன் சமாஜ் கட்சியினர் பகிரங்க குற்றச்சாட்டு

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன ஸ்வேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்து போன இளம்பெண் ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய தகவல் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷவர்மா சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்த இளம்பெண் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.