ETV Bharat / state

நெல்லை ராக்கெட் ராஜா வீட்டில் போலீசார் சோதனை.. ஆயுதங்கள், மான் கொம்புகள் பறிமுதல்! - rocket raja

Rocket raja: நெல்லை மாவட்டம் பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வீட்டில் இன்று காவல்துறையினர் சோதனை நடத்தியதில் மான் கொம்பு, துப்பாக்கியில் மாட்டும் பைனாகுலர், துப்பாக்கி குண்டுகள் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 8:35 PM IST

திருநெல்வேலி: திசையன்விளை அருகே உள்ள ஆணை குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் கிராமத்தில் நடைபெற்ற சாமிதுரை கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் போடப்பட்ட நிலையில் ஜாமீனில் வந்துள்ளார். இந்த கொலை வழக்கில் தாழையூத்துவை சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கும் தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கைதியாக இருந்த முத்து மனோவை (27) சிறையில் கைதிகளாக இருந்த ஒரு கும்பல் முத்து மனோவை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இது சம்பந்தமாகச் சிறையிலிருந்த தாழையூத்துவை சேர்ந்த ஜேக்கப் (29),மகேஷ்(25), ராம்(24) மகாராஜா(28), சந்தன மாரிமுத்து(22) கனக சாமி(22), அருள்(22) ஆகிய ஏழு பேர் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் உள்ள ஜெயிலர், துணை ஜெயிலர், தலைமை வார்டன், சிறைக் காவலர், உள்ளிட்ட ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில் கொலை செய்யப்பட்ட சாமிதுரை கொலை வழக்கிலும் ஜேக்கப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஜேக்கப்பை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆணை குடியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா என்பவர் வீட்டில் ஆயுதங்கள் தனக்குக் கிடைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் இன்று காவல்துறையினர் ஆனைகுடியில் உள்ள ராக்கெட் ராஜா வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் வீட்டில் மான் கொம்பு, அரிவாள் துப்பாக்கி, துப்பாக்கியில் மாட்டக்கூடிய பைனாக்குலர் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது.

நாங்குநேரி அருகே பஞ்சாங்களத்தில் சாமிதுறை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா கடந்த 2023 ஜூலை 21ஆம் தேதி தான் விடுதலை செய்யப்பட்டார். இந்த சாமிதுரை கொலை வழக்கில் தாழையூயத்தைச் சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: பணிப்பெண் சித்ரவதை விவகாரம்: திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.