ETV Bharat / state

புதுவண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை! - ROWDY MURDER - ROWDY MURDER

CHENNAI ROWDY MURDER: புதுவண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளியை வெட்டி படுகொலை செய்து தப்பியோடியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

கொலை செய்யப்பட்ட ரவுடி லோகேஷ்
கொலை செய்யப்பட்ட ரவுடி லோகேஷ் (Credit -ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 9:16 PM IST

சென்னை: வடசென்னை திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி லோகேஷ்(32). இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த சொட்டை பிரகாஷ் என்பவர் லோகஷின் நண்பரான கானாங்கத்தை ராஜ் என்பவருடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட லோகேஷ் பிரகாஷை அடித்து அனுப்பி வைத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், லோகேஷ்-யை பின் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்பொது பாலகிருஷ்ணா நகர் பகுதியில் தனியாக இருந்த லோகேஷை பிரகாஷ் தனது கூட்டாளிகளுடன் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், தலை கை கால்கள் என படுகாயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸ் குற்றச்சாட்டு! - Former Minister Senthil Balaji Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.