ETV Bharat / state

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. விமான நிலையங்களில் நடப்பது என்ன?

நாடு முழுவதும் தொடர்ச்சியிக விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையமும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்ற நிலை தான் உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்யும் அதிகாரிகள்
சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 21 minutes ago

சென்னை: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போன்ற செய்திகளை அவ்வப்போது பார்த்திருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட மிரட்டல்களைத் தொடர்ந்து பலரின் உழைப்பு செலவிடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையிலும் விமான நிலையங்களின் பாதுகாப்பு மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் (CISF) வசம் உள்ளது.

நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 24 வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை விமான நிலையத்தில் உள்ள 5 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மிரட்டல் வந்துள்ளது.

இதனால், விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் இல்லாததால், இது வழக்கமாக சமூக விரோதிகள் கிளப்பிவிடும் வதந்தி என்று தெரிய வந்தது. தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் சைபர் கிரைம் போலீசார் உடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்திற்கும், விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால், என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்? எவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரிடம் ஈடிவி பாரத் கேட்டது.

அப்போது பேசிய அவர், “சென்னை விமான நிலையத்திற்கு முகவரி இல்லாத இ - மெயில்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுவது வழக்கமாகி வருகிறது. மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடும்போது விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய காவல்துறையினர் ஆகியோர் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.

இதையும் படிங்க: சென்னை டூ அந்தமான் - தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள இ-மெயிலில் என்ன மாதிரி தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என அறிந்து, அதற்கேற்றால் போல் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படும். குறிப்பாக, விமானத்தின் பெயர், புறப்படும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தால், உடனடியாக அந்த விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை வைத்து சோதனை செய்யப்படும்.

விமானம் புறப்படத் தயாராக இருந்தால் பயணிகள் ஏறுவதற்கு உடனடியாக அனுமதி மறுக்கப்பட்டு முழுமையான சோதனை நடத்தப்படும். ஒருவேளை வானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டால், விமான கட்டுப்பாட்டு அமைப்பு (Air Traffic Control) மூலம் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு தகவல் அளிக்கப்ட்டு விமானம் தரையிறக்கப்பட்டு சோதனை நடைபெறும். பயணிகள் அனைவரையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்டு இத்தகைய சோதனைகள் நடைபெறும் என அதிகாரிகள் கூறினர்.

ஆனால், இ-மெயிலில் சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தால், அதன் உண்மை தன்மையை அறிந்து அது போலியா? உண்மையா? என விசாரணை நடத்தப்படும். அதன் பிறகு பாதுகாப்பு நலன் கருதி மோப்ப நாய்கள் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்வர்.

சென்னையைப் பொறுத்தவரையிலும் இதுவரை வந்த அனைத்து வெடிகுண்டு மிரட்டல்களும் அதிகாரிகளின் சோதனையில் புரளி என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும், பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, ஒவ்வொரு முறை வெடிகுண்டு மிரட்டல் வரும் பொழுதும், சென்னை விமான நிலையம் முழுவதும் வெடி பொருட்களைக் கண்டறியும் கருவிகள் கொண்டு மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். மேலும், மிரட்டல் வரும் முகவரி இல்லாத இமெயில் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில் தான் விமான நிலையத்தில் பணியாற்றும் மோப்பநாய்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சென்னை விமான நிலையத்தில் 9 மோப்பநாய்கள் வெடிகுண்டுகளை கண்டறிவது, போதைப் பொருட்களைக் கண்டறிவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. விமான நிலையத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்ற சீசர் என்ற நாய்க்கு செப்டம்பர் 30ம் தேதி, பணி ஓய்வு விழா நடந்த போது மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISG) டிஐஜி அருண் சிங் இதனை குறிப்பிட்டார். "பெரும்பாலும் மிரட்டல்கள் புரளியாகவே இருந்தாலும், ஆபத்தான பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்வதில் இந்த மோப்பநாய்களின் பங்கு குறிப்பிடத்தக்கது" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இது குறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தின் ஆய்வாளரான பாண்டி நம்மிடம் கூறுகையில், “முகவரி இல்லாமல் வெடிகுண்டு மிரட்டல் விடும் இந்த சமூக விரோதிகளை கூண்டோடு பிடிப்பதற்காக தனிப்படை ஒன்றை அமைத்துள்ளோம். கடந்த ஓராண்டில் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக நான்கு நபர்களை கைது செய்துள்ளோம்.

சென்னை விமான நிலையத்திற்கு போலி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசன்னா (27) என்ற நபரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் எதிர் வீட்டுக்காரரை பழி வாங்குவதற்கு அவரது பெயரில் போலி இ-மெயில் உருவாக்கி, சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

அதேபோல், சில நாட்களுக்கு முன்பாக இரண்டு பள்ளி மாணவர்கள் தொலைபேசி மூலம் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டு, அவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினோம். ஆனாலும், விமான நிலையத்திற்கும், விமானங்களுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

தொடர்ந்து, மிரட்டல் வரும் ஐடிகளை வைத்து சைபர் கிரைம் போலீசார் உடன் இணைந்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். தீவிர விசாரணை நடத்தப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் சமூக விரோதிகளை விரைவில் கைது செய்வோம்” என தெரிவித்தார்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, "இது போன்று போலியான மிரட்டல்கள் விடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார். ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு வாரணாசியில் பேட்டி அளித்த அவர், இதற்கான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள மற்ற அமைச்சகங்களின் கருத்துகளையும் கேட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை அறியக்கூடிய குற்றமாக (Cognisable Offences) கருத திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி, நீதிமன்றத்தின் உத்தரவு இன்றி தாமாகவே கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அக்டோபர் 22ம் தேதி மட்டும் இந்தியாவில் இருந்தது இயங்கும் 30 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 21 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.