ETV Bharat / state

குடும்பத்தினர் கண் முன்னே வெட்டி கொல்லப்பட்ட ரவுடி; சென்னையில் பரபரப்பு! - Rowdy Murder in Chennai - ROWDY MURDER IN CHENNAI

Rowdy Murder in Chennai: சென்னை சைதாப்பேட்டையில் மனைவி மற்றும் குழந்தையின் கண்முன்னே ரவுடி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

File photo of the murder
கொலை குறித்த கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 10:13 AM IST

சென்னை: சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்த கௌதம் (வயது 27) அதே பகுதியில் தனது மனைவி பிரியா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் வீட்டில் மனைவி மட்டும் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த கௌதமை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கௌதம்‘ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கௌதமனின் மனைவி உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சைதாப்பேட்டை காவல் துறையினர், கௌதமின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கௌதம் தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை உட்பட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், உயிரிழந்த கௌதமனின் மனைவி பிரியாவின் முதற்கணவரான ராஜ்கிரணுக்கும், கௌதமிற்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும், அதன் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மனைவி மற்றும் குழந்தையின் கண்ணெதிரே நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. இரண்டு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு! - Bus Hit Man In Coimbatore

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.