ETV Bharat / state

மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு? சேலம் பெரியார் பல்கலை மாணவர்கள் பரபரப்பு புகார்! - Periyar University Corruption Case

Salem Periyar University Corruption Issue: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் ரூ.2.5 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரில், புகார் தெரிவித்த மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Periyar University
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 3:29 PM IST

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் ரூ.2.5 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி இத்திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேசிய பழங்குடியினர், ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் புகார் அளித்தனர்.

இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல், திட்டத்தின் பொறுப்பாளர் சசிகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிலர் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, மாணவர்கள் அளித்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், புகார் அளித்த மாணவர்கள் 13 பேரும் முறைகேடு தொடர்பான ஆவணங்களுடன் சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டது. அதன் பேரில் 10 மாணவர்கள் இன்று (ஜூலை 26) காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து புகாருக்குள்ளான பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல் மற்றும் இத்திட்டத்தில் பணிபுரிந்த அனைத்து நிலை அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சாலையில் பற்றி எரிந்து சாம்பலான சுற்றுலா வேன்;கதறி அழுத உரிமையாளர் குடும்பத்தினர்! - fire accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.