ETV Bharat / state

தவெக மாநாடு; சென்னை - விழுப்புரம் செல்ல மாற்று வழி.. திண்டிவனத்தை தவிர்க்க போலீஸ் திட்டம்? - TVK MAANADU TRAFFIC UPDATE

தவெக மாநாட்டையொட்டி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விக்கிரவாண்டியில் காவல்துறை சார்பில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தவெக மாநாடு  கட்அவுட்
தவெக மாநாடு கட்அவுட் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 1:42 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த சித்தணி தனியார் கல்லூரியில், மாநாட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், எஸ்பி தீபக் ஸ்வாட்ச் உள்ளிட்ட அதிகாரிகள் உயர் மட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு, தனியார் பேருந்துகளை மட்டும் திண்டிவனம் - விழுப்புரம் சாலையில் அனுமதிப்பது என்றும், வேன், கார்கள், ஆம்னி பஸ்கள் கூட்டேரிப்பட்டு, திருக்கனுர் வழியாக முண்டியம்பாக்கத்தில் இணையும்படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களான லாரிகள், டாரஸ் லாரிகள் திண்டிவனம் - புதுச்சேரி வழியாக கடலூர் சென்று, அங்கிருந்து பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லவும், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் கிழக்கு கடற்கரை சாலையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், விழுப்புரத்திலிருந்து - திண்டிவனம் செல்லும் சாலையை தவெக தொண்டர்கள் வரும் வாகனங்களை மட்டும் அனுமதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..” - தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

சென்னைக்கு செல்பவர்கள் விழுப்புரம் - செஞ்சி வழியாக திண்டிவனம் சென்று, சென்னை செல்லும் வகையில் மாநாடு நாளன்று மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் 27-ம் தேதி சென்னையிலிருந்து திண்டிவனத்தை கடந்து விழுப்புரம் வழியாக செல்வதையும், தென் மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு செல்வதை தவிர்ப்பது உகந்ததாக இருக்கும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மாநாட்டிற்காக புறவழிச்சாலையில் இருபுறமும் கட்சியினர் வைத்திருந்த பேனர்களை போலீசார் அப்புறப்படுத்த கூறினர். இதற்கு விஜய் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க, மாநாட்டுக்கான அனுமதி நிபந்தனையில் கட் - அவுட் வைக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளதை போலீசார் தெளிவுப்படுத்திய பின், பேனர்களை அப்புறப்படுத்த ஒப்புக் கொண்டனர்.

மேலும், செங்கல்பட்டு முதல் விழுப்புரம் வி.சாலை வரை தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 50 அடிக்கும் வைக்கப்பட்டுள்ள மாநாடு தொடர்பான பேனர்கள் மட்டும் கட் அவுட்களை அகற்ற காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.