ETV Bharat / state

"அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளன" - காவல்துறை வாதம்! - aiadmk ex minister saroja case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 10:09 PM IST

Madras High Court: வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நாமக்கல் மாவட்டம், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன். இவர் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன் ஆவார்.

இவர் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது ராசிபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தார். அந்த புகாரில், "சத்துணவு திட்டத் துறையில் வேலை வாங்கித் தருவதாக 15 பேர் என்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர். அந்த தொகையை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை" என அந்த புகாரில் கூறி இருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள சரோஜா, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, "முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிரான புகாரில் 34 சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன.

மேலும், அவரது வீட்டுக்கேச் சென்று பணம் கொடுத்ததற்கான சாட்சிகளும் உள்ளன. தற்போது இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது" என தெரிவித்தார். இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக சரோஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனையுடன் ஜாமீன்.. யூடியூப் சேனலையும் மூட உத்தரவு! - Felix Gerald Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.