தென்காசி: தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இரவு ரோந்து பணியிலிருந்த காவலர்களில் ஒருவர் அந்த பகுதியிலிருந்த இளைஞர் ஒருவரைத் தாக்கி தள்ளிவிட்டு நெஞ்சில் மிதிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
காவல்துறையின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர் மது அருந்தியதாகவும், காவலர்கள் இளைஞரின் வாகன சாவியைப் பிடுங்கியதால், இரு தரப்பினருக்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி காவலர் அந்த இளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு பிங்க் ஸ்குவாட் - சென்னை மெட்ரோவின் அசத்தல் திட்டம்!