ETV Bharat / state

மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை மரத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்! - robbery in Mayiladuthurai - ROBBERY IN MAYILADUTHURAI

robbery in Mayiladuthurai: மயிலாடுதுறையில் தனியார் சிட்பண்ட் ஊழியரிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

robbery in Mayiladuthurai
robbery in Mayiladuthurai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 1:58 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தனியார் சிட்பண்ட் ஊழியரை தாக்கி வழிப்பறி
செய்துவிட்டு தப்பி ஓடியவரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரனையில், மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்தவர் ஜெகன்நாதன்(46). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் சிட்பண்ட் ஒன்றில் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆனதாண்டவபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வசூலுக்காக சென்றுள்ளார். அப்போது அவரது வாகனம் பஞ்சராகியுள்ளது. இதனால், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டு வந்துள்ளார்.

அப்போது, வாகனம் கழுக்காணி முட்டம் அருகே சென்றுகொண்டிருந்த போது மர்மநபர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தை வழிமறித்துள்ளனர். பின்னர், லிப்ட் கொடுத்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் மற்றும் மர்ம நபர்கள் சேர்ந்து ஜெகநாதனை அடித்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறிமுதல் செய்து தப்பித்துள்ளனர்.

இந்த சமயத்தில், ஜெகன்நாதனின் நண்பர்கள் மற்றும் கழுக்கானி முட்டத்தை சேர்ந்தவர்கள் சிலர் வழிப்பறி செய்தவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்துள்ளனர். இதில், இருவர் தப்பிய நிலையில், ஜெகன்நாதனுக்கு லிப்ட் கொடுத்த நபரை பிடுத்துள்ளனர். பின்னர், அவரை மரத்தில் கட்டி வைத்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட நபரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் கழனிவாசல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வரதராஜன் (18), கழுக்காணிமுட்டம் ஈவெரா தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் மூன்று பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து வரதராஜன், சுபாஷ் ஆகிய 2 பேரை மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், 17 வயது சிறுவனை தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆம்பூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் தலைமைக் காவலர் உயிரிழப்பு! - Ambur Women Police Dead

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.