ETV Bharat / state

சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 5:09 PM IST

Salem Jactto Geo Protest: அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

சேலம்: கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான புதிய உரிமைகளோ, சலுகைகளோ இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இதன் தொடர்ச்சி தான் 2016 ஆம் ஆண்டும் தொடர்ந்தது, அதற்குப் பிறகு ஜாக்டோ ஜியோ அமைப்பு பல்வேறு போராட்டங்களையும், பல்வேறு நிகழ்வுகளையும் நடத்தி இருந்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்த உடன் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் தற்பொழுது ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் திமுக அரசு அந்த வாக்குறுதி உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களின் நலன் சார்ந்த நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து ஜாக்டோ ஜியோ என்ற அரசு ஊழியர்களின் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் இன்று (ஜன.30) நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று சேலம் கோட்டை மைதானத்தில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை மறுக்கப்பட்டு இருப்பதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணி காலத்தினை, அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனி காலமாக வரைமுறைப்படுத்த வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளிலும், பல்வேறு அரசு துறைகளிலும், தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இந்த மறியல் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அரசு ஊழியர்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் வருவாய் துறை பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளதால் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாலை மறியல் போராட்டம் குறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், “பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் படி நிறைவேற்ற வேண்டும். அண்டை மாநிலங்களில் கூட, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். இல்லை என்றால் மாநிலம் தழுவிய மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பிப்ரவரி 1 முதல் மதுபானங்கள் விலை உயர்வு - டாஸ்மாக் அதிரடி அறிவிப்பு! - மது பிரியர்கள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.