ETV Bharat / state

தேனியில் மெத்தாம்பெட்டமைன் கடத்தி வந்த மூவர் கைது.. பிண்ணனி என்ன? - Drugs seized in Theni - DRUGS SEIZED IN THENI

Methamphetamine drug smuggling: தேனியில் மெத்தாம்பெட்டமைன் என்ற சர்வதேச சந்தையில் கிடைக்கும் போதைப்பொருள் கடத்தி வந்த மூவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தி கைது செய்யப்பட்ட நபர் புகைப்படம்
போதைப்பொருள் கடத்தி கைது செய்யப்பட்ட நபர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 3:42 PM IST

தேனி: பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டி புறவழிச்சாலையில், பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் வழக்கம்போல் நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கேரளா மாநிலப் பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் இருந்தவர்களிடம் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் கார் முழுவதையும் சோதனை செய்துள்ளனர். அப்போது, காரில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் 'மெத்தாம்பெட்டமைன்' என்ற போதைப்பொருள் 30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மூவரையும் கைது செய்ததோடு, காரையும் பறிமுதல் செய்து பெரியகுளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், சர்வதேச சந்தையில் மட்டும் கிடைக்கும் போதைப்பொருளான மெத்தாம்பெட்டமைன் கைப்பற்றப்பட்ட தகவலறிந்த தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், பெரியகுளம் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் அதன் சர்வதேச சந்தை மதிப்பு குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்க முயன்றபோது, அவர் செய்தியாளர்களுக்கு எந்த தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனையடுத்து பேசிய பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர், போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது உண்மைதான், ஆனால் இது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? விற்பனை செய்பவர்கள் யார்? என தொடர்ந்து விசாரணை செய்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் மதிப்பு குறித்து போலீசார் தெரிவிக்க மறுத்ததோடு, பிடிபட்ட நபர்களின் விவரங்களையும் தர மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சொகுசு காரில் கட்டுக் கட்டாக சிக்கிய ரூ.1 கோடி.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.