ETV Bharat / state

"இலங்கை கடற்படை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! - Anbumani Ramadoss

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 9:30 PM IST

Anbumani Ramadoss: ராமேஸ்வரம் மீனவர்களில் ஒருவர் கப்பல் மோதி உயிரிழந்துள்ளார். இதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் இலங்கை கடற்படை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தனர்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, “காவிரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணை மூலமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நீரில் 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் கடலில் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி ஒரு வினாடி என்றால், ஒரு நாளைக்கு 15 டிஎம்சி நீர் ஆகும்.

கர்நாடகா காவிரிக்கு கொடுக்க வேண்டியது 177 டிஎம்சி. ஆனால், கடலில் சென்று கொண்டிருப்பது 17 டிஎம்சி. சென்னையின் குடிநீர் தேவைக்கு ஓர் ஆண்டுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு 15 டிஎம்சி. சென்னைக்கு ஓராண்டுக்குத் தேவையான தண்ணீரை ஒரே நாளில் வீணாக்குகிறது தமிழக அரசு. முதலமைச்சர் காவிரியில் வருகின்ற நீரைப் பயன்படுத்தி கடலில் கலக்கும் இந்த நீரை பல திட்டங்கள் மூலம் வகுக்க வேண்டும்.

காவிரியில் தடுப்பணைகள்: காவிரியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். தமிழ்நாட்டிற்கு உயிர்நாடி ஆறு, 7 கோடி மக்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள். அதில் 5 கோடி மக்கள் காவிரியை நம்பி இருக்கின்றார்கள். ஆனால், காவிரியில் வருகின்ற நீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. ஊழல், கொலை, கொள்ளை தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயம், கஞ்சா, போதைப் பொருட்கள் அதிகமாகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை.

சாதிவாதிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: முதலமைச்சர் சாதிவாதிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நீதிமன்றம் இரண்டு முறை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தச் சொல்லியும் அரசியல் ரீதியாக நடத்த மறுக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. சமூக நீதி என்று அக்கறை இருந்தால் கண்டிப்பாக நடத்தி இருப்பார்கள்.

அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு வந்த தீர்ப்பு திராவிட ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள். தமிழக அரசு 23 மாதத்தில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. 33.7 விழுக்காடு உயர்த்தி இருக்கிறார்கள். மக்கள் விரோத ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய பாடத்தை கற்பிப்பார்கள்.

கொலை முயற்சி வழக்கு: ராமேஸ்வரம் மீனவர்கள் கப்பல் மோதி ஒருவர் இறந்து விட்டார். இது கொலை செய்யும் முயற்சி. இந்திய அரசும், தமிழக அரசும் இலங்கை கடற்படை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது சம்பந்தமாக மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றோம். தமிழக அரசும் மெத்தனப்போக்கோடு இருக்கக்கூடாது.

வயநாடு மழை பாதிப்பு: வயநாடு மழை வெள்ளத்தில் 200 பேர் காணவில்லை. இது மிகப்பெரிய ஒரு விபத்து. தொடர்ந்து விபத்துக்கள் தடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசு இனியாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காலநிலை மாற்றம், பருவ நிலை மாற்றம் ஒரே நாளில் 325 மி.மீ மழை பெய்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோவை வழக்கறிஞர் படுகொலைக்கு இதுதான் காரணமா?.. எஸ்பி அதிரடி தகவல்! - Coimbatore Lawyer Murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.