ETV Bharat / state

"விக்கிரவாண்டி தேர்தல் நடத்த தேவையில்லை.." - அன்புமணி ராமதாஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு! - Anbumani Ramadoss - ANBUMANI RAMADOSS

Anbumani Ramadoss: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பஞ்சாயத்து தேர்தலை விட மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தத் தேவையில்லை. திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு போகலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 9:13 PM IST

வேலூர்: காட்பாடியில் மாநில அளவிலான இறகுபந்து இறுதிப் போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவாது, “தமிழக அரசு இறகுபந்து விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள் விளையாட்டு அரங்கம் கட்டி கொடுக்க வேண்டும். இந்தியாவிலேயே வேகமாக இறகுபந்து விளையாடும் மாநிலம் தமிழ்நாடு.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். சிபிசிஐடி மீது மரியாதை உள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அவர்கள் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. கள்ளச்சாராய விவகாரத்தில் அரசியல்வாதிகள், காவல்துறையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே, இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பஞ்சாயத்து தேர்தலை விட மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தத் தேவையில்லை. இது ஒரு தேர்தலா? இப்படித்தான் ஜெயிக்க வேண்டுமா? இதற்கு தேர்தலே தேவையில்லை.

திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு போகலாம். திமுகவினரை நம்பி பெண்கள் போவது எனக்கு பயமாக உள்ளது. திமுகவினர் பெண்களின் குழந்தைகளை கடத்தி வைத்துக்கொண்டு எங்களுக்கு ஓட்டு போட்டால் தான் விடுவோம் என்ற நிலைக்கும் செல்வார்கள். விக்கிரவாண்டியில் நடைபெறுவது இடைத்தேர்தல் அல்ல, எடை தேர்தல்.

சமூக நீதிக்கு எதிராக உள்ளவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “சமூக நீதி குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். இன்றைக்கு சமூக நீதிக்கும், திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க முதலமைச்சரிடம் செல்வப்பெருந்தகை கோரிக்கை வைக்க வேண்டும்.

திமுகவிற்கு தகுதி கிடையாது: தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு. இது குறித்த வழக்கு ரத்து செய்யப்பட்டால், பஞ்சாயத்து தேர்தலில் கூட திமுக நிற்க முடியாது. முதலமைச்சர் ஸ்டாலினின் பெயர் கருப்பில் எழுதப்படும். கணக்கெடுப்பு நடத்துவதில் திமுகவிற்கு என்ன பயம்? சமூக நீதி பற்றி பேச திமுகவிற்கு தகுதி கிடையாது.

நீட் தேர்வு: திமுகவின் காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நாங்கள் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. நீட் பயிற்சி மையங்கள் ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கோடி கொள்ளை அடித்து வருகிறார்கள். நீட் தேர்வால் தரம் இல்லாத மருத்துவர்கள் வருகிறார்கள்” என்றார்.

நாய் கூட B.A பட்டம் வாங்கும் நிலை வந்திருச்சு. இதெல்லாம் திமுக போட்ட பிச்சை என ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஆர்.எஸ்.பாரதி அவர் பேசுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்றார்.

90 மிலி டெட்ரா பாக்கெட்டில் விற்பனை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு சாராயத்தை ஒழிக்க முடியாது என ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் உடனே கள்ளச்சாராயத்தை ஒழிப்போம். நெல்லை, கோயம்புத்தூர் மேயர்கள் ராஜினாமா செய்வது தான் திமுக அரசு செயல்பாட்டுக்கு உதாரணம்” என்றார்.

அரசு விற்கும் சாராயத்தில் கிக்கு இல்லை, அதனால்தான் கள்ளச்சாராயத்தை தேடிச் செல்கிறார்கள் என சட்டபேரவையில் அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, “சரக்கில் கிக் வர வேண்டும் என்றால் என்ன செய்வது என நீங்கள் அமைச்சர் துரைமுருகனை தான் கேட்க வேண்டும் அல்லது அமைச்சர் ஜெகத்ரட்சகனையோ, டி.ஆர்.பாலுவையோ கேட்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: "நாய் கூட B.A பட்டம் வாங்கும் நிலை வந்திருச்சு..இதெல்லாம் திமுக போட்ட பிச்சை" - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.