ETV Bharat / state

அரசு ஆவணத்தில் தொலைந்து போனதா பட்டா? பட்டா இல்லாமல் தவிக்கும் மாங்கணாம்பட்டு கிராம மக்கள்! மாவட்ட ஆட்சியரிடம் மனு! - Manganampattu Patta Issue

Manganampattu Village Patta Issue: மாங்கணாம்பட்டு கிராமத்தில் 100 குடியிருப்புகளுக்கு எஃப்.எம்.பி (நிலவரைபடம்) தொலைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியதால், 2 ஆண்டுகளாக ஆழைக்கழிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர்.

மாங்கணாம்பட்டு மக்கள் ஆட்சியரிடம் மனு
மாங்கணாம்பட்டு மக்கள் ஆட்சியரிடம் மனு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 7:16 PM IST

மாங்கணாம்பட்டு மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமைலாடி ஊராட்சியில் உள்ளது மாங்கணாம்பட்டு கிராமம். நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்தே காணாமல் போவதைப் போன்று, தங்கள் கிராமத்தில் 100 குடியிருப்புகளுக்கு உரிய பட்டா அரசு ஆவணத்தில் இருந்தே தொலைந்து போனதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து உள்ளனர்.

இது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் கிராம மக்கள் அளித்த புகார் மனுவில், சீர்காழி அடுத்த மாங்கணாம்பட்டு உட்கிராமத்தில் உள்ள புல எண் 262 சி மற்றும் 262 பி ஆகியவற்றில் 100 குடும்பங்கள் மூதாதையர் காலத்தில் இருந்தே வசித்து வருவதாகவும், அந்த இடங்களுக்கான பத்திரங்கள் அனைவரிடமும் உள்ளன. ஆனால் பட்டா இல்லை.

சீர்காழி வட்டாட்சியரிடம் பட்டா கேட்டு விண்ணப்பித்த போது, அப்புல எண்களுக்குரிய நில வரைபடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லை என தெரிவித்தாகவும், இந்த புல எண்களுக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் அடங்கலும் இல்லாததால், இங்கு குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறியதாக குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் பட்டா இல்லாததால் தங்கள் இடத்துக்கு வங்கிக் கடனோ, அல்லது வாரிசுகளுக்கு உரிமை மாற்றம் உள்ளிட்ட எந்த சொத்து பரிமாற்றமும் செய்ய முடியவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்த போது, பட்டா பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டு விட்டது என்றும், எஃப்.எம்.பி (நிலவரைபடம்) தொலைந்துவிட்டது என்று அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளாக அலைக்கழிப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாவது முறையாக மனு கொடுத்துள்ளோம் எண்றும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஹோட்டலில் இளம் பெண் சுட்டுக் கொலை.. துப்பாக்கியுடன் பிடிபட்ட ஆண் நண்பர்.. பூனாவில் பரபரப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.